Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக தேர்தல் அறிக்கை ஒரு பொக்கிஷம்... செய்வதைத்தான் சொல்வோம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது திமுகவின் சமுதாயக் கடமைகளில் ஒன்று என அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். நாங்கள் எல்லாம் அரசியல்வாதிகள் என்ற நிலையில் மாத்திரம் இந்த உறுதி மொழிகளைத் தரவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் நாங்கள். உங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் நாங்கள். நாங்கள் சொன்ன சொல்லைத் தவறினால் என்ன ஆகும் என்று எங்களுக்குத் தெரியும் என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டு ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். பிரதான எதிர்கட்சியான திமுக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டு பேசினார்.

செய்வதைச் சொல்வோம்

செய்வதைச் சொல்வோம்

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன உறுதி மொழிகள் நிறைவேற்றப்படும் என்பதை வரிசைப்படுத்திக் காட்டினேன். இந்த உறுதிமொழிகளையெல்லாம் நான் வரிசைப்படுத்தியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பலவற்றை நேரத்தின் அருமை கருதி சிலவற்றை விட்டு விட்டு, மற்றவைகளைப் படித்திருக்கிறேன். இவ்வளவையும் படித்திருக்கிறேன் என்றால், "சொல்வதைச் செய்வோம்" "செய்வதைச் சொல்வோம்" "செய்வதைத் தான் சொல்வோம்".

திமுக அரசு

திமுக அரசு

மக்களை, வாக்காளர்களை, ஏழையெளியவர்களை, வியாபாரிகளை ஏமாற்றுவதற்காக, சட்டமன்றத்தில் நின்று கொண்டு "நாங்கள் இந்தத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவோம்" என்று ஒரு இருநூறு திட்டங்களை அறிவித்து விட்டு, எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாமல் இருக்கின்ற அரசு அல்ல, திராவிட முன்னேற்றக் கழக அரசு.

உடனடியாக நிறைவேற்றிய அரசு

உடனடியாக நிறைவேற்றிய அரசு

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் அறிவித்து அவற்றை எத்தனை நாட்களுக்குள் நிறைவேற்ற முடியும் என்பதை யெல்லாம் எண்ணிப் பார்த்து, அவற்றை உடனடியாக நிறைவேற்றுகின்ற அரசு தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை நீங்கள் கடந்த காலங்களில் கண்டிருக்கிறீர்கள்.

மீண்டும் மது விலக்கு

மீண்டும் மது விலக்கு

மதுவிலக்கு பற்றி தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் பேசுகிறார்கள். மது விலக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு ஒத்தி வைத்து, பிறகு மீண்டும் கழக ஆட்சிக் காலத்திலேயே மதுவிலக்கைத் தீவிரமாக நிறைவேற்ற முன் வந்தது அனைவருக்கும் தெரியும்.

ரத்து செய்தவர்கள் யார்

ரத்து செய்தவர்கள் யார்

தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது இவர்கள் தானே மதுவிலக்கை முதன் முதல் ரத்து செய்தவர்கள் என்று சொல்லியிருக்கிறார். யார் யார் எதை எதை எப்போது ரத்து செய்தார்கள், என்ன காரணத்திற்காக ரத்து செய்தார்கள் என்பது வரலாறு. முதன் முதலில் ரத்து செய்தவர்கள் நாங்கள் அல்ல. முதன் முதலில் ரத்து செய்தவர்கள் யார் என்பதை நாடறியும்.

பூரண மதுவிலக்கு

பூரண மதுவிலக்கு

ஆகவே நாங்கள் முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லியிருப்பதைப் போல படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவோம் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் இதில் படி ஏதும் கிடையாது. வழியிருந்தால், படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று சொல்லியிருக்க முடியும். படிப்படியாக நிறைவேற்ற முன்வருவோம் என்று நாங்கள் சொல்லத் தயாராக இல்லை. மதுவிலக்கை மீண்டும் கொண்டு வருவோம்.

வாழ்க்கை இழந்த ஏழைகள்

வாழ்க்கை இழந்த ஏழைகள்

ஏழையெளியவர்கள் வீட்டுக் குழந்தைகள், பெரியவர்கள், முதியோர் ஆகியோரெல்லாம் எத்தனை பேர் மதுவினால் தங்கள் வாழ்வையே இழந்திருக்கிறார்கள் என்பதைக் கண்கூடாகக் காணுகிறோம். இதற்குப் பிறகும் நாங்கள் மதுவிலக்கை படிப்படியாகத் தான் நிறைவேற்றுவோம் என்று சொல்லுகின்ற நிலை எங்களுக்குக் கிடையாது.

பேரதரவு தேவை

பேரதரவு தேவை

இன்று அறிவிக்கப்பட்ட திட்டங்கள், சாதனைகள் அத்தனையும் நிறைவேற்றப்படும். இவைகளை நிறைவேற்றுகின்ற பணியிலே உங்களுடைய பேராதரவு எங்களுக்குத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

குடும்ப உறுப்பினர்கள்

குடும்ப உறுப்பினர்கள்

நாங்கள் எல்லாம் அரசியல்வாதிகள் என்ற நிலையில் மாத்திரம் இந்த உறுதி மொழிகளைத் தரவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளைகள் நாங்கள். உங்கள் குடும்பத்து உறுப்பினர்கள் நாங்கள். நாங்கள் சொன்ன சொல்லைத் தவறினால் என்ன ஆகும் என்று எங்களுக்குத் தெரியும்.

சமுதாயக்கடமை

சமுதாயக்கடமை

அதிலே தமிழ் நாட்டிலே உள்ள ஏழையெளிய மக்கள், மதுவுக்கு அடிமையாகி, தங்களுடைய வாழ்வை சீரழித்துக் கொண்டு, குடும்பத்தையும் சீரழித்துக் கொண்டு, சமுதாயத்தையும் சீரழிக்கின்ற நிலையிலே அவர்கள் செல்வதை நாம் அனுமதிக்க முடியாது. ஆகவே திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு சமுதாய இயக்கம் என்ற முறையில், அந்தச் சமுதாயக் கடமைகளில் ஒன்று, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாகும்.

தொண்டர்களுக்கு வேண்டுகோள்

தொண்டர்களுக்கு வேண்டுகோள்

மதுவிலக்கைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உங்களுடைய ஒத்துழைப்பை - அதற்குப் பக்க பலமாக இருக்கின்ற அந்த நிலையை - தொடர்ந்து வழங்கிட வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டு, இன்னும் பல அரிய திட்டங்களைத் தமிழ்ச் சமுதாயம் பெற்றிட முன்வரவேண்டும்.

'அறிக்கை அல்ல பொக்கிஷம்'

'அறிக்கை அல்ல பொக்கிஷம்'

இந்த அருமையான தேர்தல் அறிக்கையை மலர் என்றும் சொல்லலாம்; பொக்கிஷம் என்றும் சொல்லலாம்; அதை அரும்பாடுபட்டு, அலைந்து திரிந்து, தமிழ்நாட்டிலே ஏன் இந்தியாவிலேயே எந்த ஒரு கட்சியும் இவ்வளவு பாடுபட்டு சேகரித்திருக்க முடியாது. அவ்வளவு பாடுபட்டு, புள்ளி விவரங்களைச் சேகரித்துள்ளனர்.

பலத்தை தாருங்கள்

பலத்தை தாருங்கள்

இந்த இனிய விழாவுக்கு - நம்முடைய உறுதிமொழிகளை நிறைவேற்றக் கூடிய பலத்தை - எங்களுக்கு நீங்கள் தாருங்கள்.
பலம் இல்லாத காரணத்தால் உங்களிடம் இறைஞ்சுகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள். வலிவும் இருக்கிறது, அதற்கு நல்ல வழியைக் காட்டுங்கள். அதற்கு வலிமை மிக்க உங்கள் தோளோடு தோள் சேர்ந்து இந்தக் கழகத்தை மேலும் வலிவு மிக்க கழகமாக பலம் பெறச் செய்தால் தான் நாம் வாழ முடியும். நாம் வாழ முடியுமென்றால், நம்மில் ஒரு சிலர் வாழ வேண்டும் என்ற பொருளில் கூறவில்லை.

அன்பு - ஆசி தேவை

அன்பு - ஆசி தேவை

நாம் என்பது நம்முடைய தமிழ் சமுதாயத்தை, நாம் என்பது தமிழர் கூட்டத்தை, நாம் என்பது இந்தச் சமுதாயத்தில் மண்டிக் கிடக்கின்ற மடமைகளை, மண்டிக் கிடக்கின்ற வறுமையை ஒழித்துக் கட்டி தமிழன் வாழ்கிறான், வாழ்கிறான் என்று அகிலம் புகழ நாம் கொடியேற்ற வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் அன்பு ஆசி வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெற்றுக் கொள்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+