ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் கொங்கு மண்ணின் மைந்தர்கள்...
கோவை: மதுரை, சிவகங்கை திருச்சி மாவட்ட மக்களுக்கு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு வீர விளையாட்டு என்றால் கொங்கு மண்டல மண்ணின் மைந்தர்களுக்கு ரேக்ளா ரேஸ் என்றால் உயிர்.
பொங்கல் பண்டிகை நாளில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை மண்ணின் மைந்தர்களைப் போல, கொங்கு மண்ணின் கிராமங்களில் பொங்கல் திருவிழா வந்துவிட்டாலே கொங்கு மண்டலத்தில்ரேக்ளா பந்தயங்களுக்கு தயாராகி விடுவார்கள்.

கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல் மாவட்ட கிராமங்களில் ரேக்ளா பந்தயங்கள் பராம்பரியமாக நடத்தப்படுகின்றன. சிவகங்கை, மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, மானாமதுரை, கல்லல் பகுதிகளிலும் ரேக்ளா பந்தையங்கள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயம் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு விலக்கியுள்ளதால், கோவை மாவட்டத்தின் சுற்று வட்டார கிராமங்களில் காளைகளும் வண்டிகளும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
கொங்கு மண்டல மண்ணின் மைந்தர்களுக்கு ரேக்ளா பந்தயம் வெறும் போட்டி மட்டுமல்ல அது உணர்வுகளோடு கலந்தது. பொங்கல் பண்டிகை எப்போது வரும் என்று காத்திருந்து பார்த்து பார்த்து பந்தயத்துக்காகவே காளைகளை வளர்க்கின்றனர். பொங்கலுக்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே புது மாப்பிள்ளையை கவனிப்பது போல கவனித்து கண்காணிக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், ரேக்ளா வண்டி தயாரிக்கும் தொழில் முடங்கிக் கிடந்தது இப்போது மத்திய அரசின் அனுமதியை அடுத்து உற்சாகமடைந்துள்ளனர் ரேக்ளா ரேஸ் வண்டி தயாரிப்பாளர்கள்.
பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரேக்ளா வண்டி தயாரிக்கும் தொழிலில் மூன்று தலைமுறையாக ஈடுபட்டு வருகின்றனர். மாட்டுவண்டி போல் அல்லாமல் ரேக்ளா வண்டிகளுக்கு நன்றாக விளைந்த தேக்கு மரத்தினை மட்டுமே சக்கரங்களின் பாகங்கள் மற்றும் நுகத்தடி செய்ய பயன்படுத்துகின்றனர். எடை குறைவாகவும் அதே நேரம் வலிமையுடையதாகவும் வண்டி இருந்தால்தான், பந்தய தூரத்தினை விரைவில் அடைய முடியும் என்பதால் கவனமாக தயார் செய்கின்றனர்.
பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டாஞ்சிட்டு என அழைக்கப்படும் காளைகளை தேர்வு செய்ய முதலில் கிராமங்களில் ரேக்ளா வண்டிகளை ஓடவிட்டு காளைகளை தேர்வு செய்வதாக சொல்கிறார் மேற்குமண்டல ரேக்ளா பந்தய சங்கத் தலைவர் யுவராஜ் . பின்னர் பந்தயத் திடலுக்கு உரிய காளைகளுக்கு சிறப்பு உணவு மற்றும் பயிற்சி அளிக்கின்றனர்.
முந்தைய காலங்களில் ரேக்ளா வண்டி பந்தையங்கள் அதற்குரிய மைதானங்களில் நடைபெறும். இப்போது தார்சாலைகளில்தான் பந்தையங்கள் நடத்தப்படுகின்றன. இழுவைத்திறன் பயிற்சியாக காளைகளுக்கு கிணறுகளில் நீச்சல் பயிற்சி அளித்து தயார் செய்கின்றனர்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டுக்கு வாடிவாசல்கள் தயாராகி வருகின்றன என்றால் மேற்கு மண்டல மாவட்டங்கள் ரேக்ளா பந்தையத்திற்கு காளைகளை தயார் செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு கொங்கு மண்டலத்தில் ரேக்ளா பந்தையத்தால் தார் சாலைகளில் தீப்பொறி பறக்கப்போவது என்னவோ நிஜம்தான்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications