காரைக்குடியில் எச் ராஜா தோற்றதற்கு யார் காரணம்?.. நாங்களா?.. உண்மையை உடைத்த நீக்கப்பட்ட நிர்வாகிகள்
காரைக்குடி: காரைக்குடி சட்டசபை தொகுதியில் எச் ராஜா தோல்வி அடைந்ததற்கு அவரது மருமகனும் உறவினர்களுமே காரணம் என கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 3 நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாஜக தேசிய குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த எச் ராஜா, பெரியாரை விமர்சித்ததாக அவரது பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பதவியேதும் இல்லாமல் அவர் பாஜக ஆதரவாளராகவே உள்ளார்.
தற்போது காரைக்குடியில் உள்ளார். இவருக்கு கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

எச் ராஜா
இதையடுத்து தமிழக சட்டசபைத் தேர்தலிலும் எச் ராஜாவுக்கு காரைக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து எச் ராஜா தோல்வியை சந்தித்திருந்தாலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றதால் இவர் வெற்றிக் கனியை சுவைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

தோல்விக்கு காரணம்
ஆனால் இவர் தோல்வி அடைந்தார். இவரது தோல்விக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளே காரணம் என்ற ஒரு புகாரை தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் செலவுக்காக பாஜக தலைமை கொடுத்த ரூ 13 கோடி நிதியை எச் ராஜா சொந்த செலவுக்கு பயன்படுத்திவிட்டதாக பாஜக தலைமைக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் புகார் அனுப்பினர்.

எச் ராஜா
இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் எச் ராஜா மீது புகார் கூறிய காரைக்குடி மண்டல தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டலத் தலைவர் பிரபு ஆகிய 3 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் அறிவித்தார்.

சந்திப்பு
இதையடுத்து இவர்கள் மூவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் புகார் தெரிவித்த எங்களிடம் விசாரிக்காமல் எச் ராஜாவிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் நிர்பந்தித்தன் காரணமாகவே எங்களை நீக்கிவிட்டனர்.

நிதி
தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் அவரது மருமகனும் ஆர்எஸ்எஸ் நிர்வாகியுமான சூர்ய நாராயணன் மற்றும் அவரது உறவினர்கள் இருந்தனர். எனவே எச் ராஜாவின் தோல்விக்கு அவரது மருமகனே காரணம்.

தமிழகத்தில் தாமரை
அடிமட்ட தொண்டர்களை எச் ராஜா அனுசரித்து செல்லாமல் இருந்தால் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது. எச் ராஜாவால் வார்டு தலைவர் பதவியில் கூட வெல்ல முடியாது என காட்டமாக தெரிவித்தனர். இதனால் எச் ராஜா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கமா என தெரியவில்லை.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
சில்லுண்டிகளை வச்சிக்கிட்டு? தவெக விஜய் அரசை துவம்சம் செய்த எச்.ராஜா.. அண்ணாமலைக்கும் விழுந்த செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications