ராகுலுக்கு நன்றி.. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும்.. பாரதிராஜா கோரிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பாரதி ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைதான தமிழர்கள் 7 பேரும் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். இவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து இழுத்துக் கொண்டே செல்கிறது.

முதலில் இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் சிறையில் உள்ளனர்.விதி எண் 161ன் படி தமிழக அரசே விடுதலைக்கு பரிந்துரை செய்யலாம். ஆளுநர் அனுமதி அளித்தால் விடுதலை செய்யலாம் என்று தற்போது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் மீண்டும் கருணை மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் நடந்த விழா ஒன்றில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் சார்பில், இயக்குனர் பாரதி ராஜா பேசினார். அதில் 7 தமிழர்களின் விடுதலை குறித்து மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
அதில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர் முடிவெடுக்க வேண்டும். முதல்வரின் பரிந்துரையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறையிலடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் இளமையை இழந்திருக்கிறார்கள்
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் ராகுல் காந்தி மன்னித்துவிட்டதற்கு நன்றி. இவர்களின் விடுதலைக்காக தீர்மானம் நிறைவேற்றி, வழக்கு தொடுத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி என்றுள்ளார்.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications