சென்னை வந்து குவிந்துள்ள நிவாரணப் பொருட்களை வினியோகிப்பதில் பிரச்சனை: உதவி தேவை
சென்னை: சென்னை மக்களுக்கு அளிக்க நிவாரணப் பொருட்களுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ள குழுக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் திணறி வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு அளிக்க உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், உடை, போர்வை, மருந்துகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தென்மாவட்டங்கள், சேலம், பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான குழுக்கள் வாகனங்களில் சென்னை வந்தடைந்துள்ளன.

வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் எந்த பகுதியை தேர்வு செய்து செல்வது, எங்கே உதவி செய்வது என்று தெரியாமல் உதவி குழுக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளன. எந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர் என்று தெரியாமல் திணறுகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவையும் இல்லாததால் அந்த குழுக்களால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் நிவாரணப் பொருட்கள் சென்னை வந்தடைந்தும் மக்களை சென்றடைய கால தாமதம் ஆகியுள்ளது.
அதிகாரிகள் அல்லது மக்களுக்கு உதவி செய்து வரும் நடிகர் சித்தார்த் குழுவினர் இந்த குழுக்களை அணுகி வழிநடத்தினால் பேருதவியாக இருக்கும். பசியால், குளிரில் வாடும் மக்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்கும்.
மேலும் சென்னை மக்களுக்காக பிற மாவட்ட, மாநில மக்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு?












Click it and Unblock the Notifications