ஷீலா பாலகிருஷ்ணனை டிஸ்மிஸ் செய்யுங்கள்.. தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் அதிரடி கோரிக்கை
சென்னை: தமிழக அரசின் ஆலோசகராக செயல்பட்டு வரும் ஷீலா பாலகிருஷ்ணனை உடனடியாக வேலையை விட்டு நீக்க வேண்டும். அதேபோல முதல்வரின் செயலாளர் வெங்கட்ரமணனையும் நீக்க வேண்டும். இதேபோல தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா ஆகியோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக அபூர்வ வர்மாவை தேர்தல் பணியில் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஈடுபடுத்தவே கூடாது என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஊழலுக்குப் பரிசு பணி நீட்டிப்பு
தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருக்கும் போது ஆட்சியாளர்களின் ஊழலுக்கும், முறைகேடுகளுக்கும் துணை நின்ற அதிகாரிகளுக்கு பரிசாக ஆலோசகர் பதவியை தமிழக ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ஆலோசகர்கள் மக்களுக்கு நன்மை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதை விட, சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் முறைகேடுகளை செய்வது எப்படி? என ஆலோசனை வழங்குவதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆலோசகர் பதவி
2011 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பின்னர் அரசின் தவறுகளுக்கு துணையாக இருந்த தலைமைச் செயலாளர்களுக்கு ஆலோசகர் பதவி வெகுமதியாக வழங்கப்பட்டிருக்கிறது. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிய தலைமைச் செயலாளர்கள் ஒரு சில மாதங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை.

மாலதி போய் தேவேந்திரநாத் சாரங்கி
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்டு தலைமைச் செயலாளராக இருந்த மாலதி மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக தேவேந்திரநாத் சாரங்கி நியமிக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டு பதவிக்காலத்திற்கு பிறகு கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் ஓய்வு பெற்ற பின்னர் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பிறகு புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன் 2014 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

முறைகேடுகளுக்குத் துணை நிற்கும் ஞானதேசிகன்
ஆனால், அவருக்கு பிறகு புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்ட மோகன் வர்கீஸ் சுங்கத் அரசின் தவறுகளுக்கு ஒத்துழைக்காததால் எட்டு மாதங்களில் மாற்றப்பட்டார். அவருக்கு பதில், பல மூத்த அதிகாரிகள் இருந்த போதிலும் அவர்களை புறக்கணித்துவிட்டு பணிமூப்பு வரிசையில் மிகவும் கீழே இருந்த ஞானதேசிகனை புதிய தலைமைச் செயலாளராக தமிழக அரசு நியமித்தது. இதற்கு காரணம் முறைகேடுகளுக்கு அவர் துணை நிற்பார் என்ற நம்பிக்கை தான்.

ராமானுஜம்
மற்றொரு புறம் ஓய்வு வயதை தாண்டிய பிறகும் கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் காவல்துறை தலைமை இயக்குனர் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்ட கே. இராமானுஜம் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் இப்போது தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், ஷீலா பாலகிருஷ்ணன் மட்டும் ஆலோசகர் பதவியில் இன்னும் நீடிக்கிறார்.

எந்த வேலையும் இல்லை
ஆலோசகர் பதவிக்கான பணி வரம்புகள் நிர்ணயிக்கப்படவில்லை என்ற போதிலும், அவர் முதலமைச்சரின் ஆலோசகராக செயல்பட்டதாக அறியமுடிகிறது. ஆனால், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, அரசின் அதிகாரம் முடக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசகருக்கு எந்த பணியும் இல்லை. எனவே, அப்பணியிலிருந்து அவர் விடுவிக்கப்படுவது தான் சரியாக இருக்கும்.

கூட்டாக இணைந்து
ஆனால், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனும், தலைமைச் செயலர் ஞானதேசிகன், உள்துறை செயலர் அபூர்வ வர்மா, 4 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று பணி நீட்டிப்பில் இருக்கும் முதலமைச்சரின் மூன்றாவது செயலர் கே.என். வெங்கட்ரமணன் ஆகியோரும் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இவர்களின் கட்டளைக்கு பணிந்து பல மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் பல மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆளுங்கட்சியின் தூதர்களாக
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஆட்சியர்கள் தான் தேர்தல் அதிகாரிகள் ஆவர். அவர்கள் மீதே ஆளுங்கட்சியின் தூதர்களாக அரசு ஆலோசகரும், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், முதலமைச்சரின் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளும் ஆதிக்கம் செலுத்தும் போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் நியாயமான நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட மறுக்கிறது. தேர்தலின் போது பெருமளவில் முறைகேடுகளை செய்தும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும் வெற்றி பெற ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆலோசகர்- உயரதிகாரிகள் குழு உதவுவதாகவும் தெரிகிறது.

ஜனநாயகப் படுகொலை
ஆளுங்கட்சியின் இந்த திட்டம் வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய ஜனநாயக படுகொலையாக இருக்கும். இதை தடுத்து நிறுத்த வேண்டிய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியின் கடமை ஆகும். எனவே, இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பணி நீட்டிப்பில் உள்ள முதலமைச்சரின் செயலாளர் கே.என். வெங்கட்ரமணன் ஆகிய இருவரையும் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா ஆகியோரை தமிழக சட்டசபைத் தேர்தலில் தலையிட முடியாத அளவுக்கு முக்கியத்துவமற்ற பணிகளுக்கு மாற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் 2026.. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்.. 4 நாட்களே செய்ய முடியும்! -
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்.. அன்புமணி அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி! -
விஜய்யை எதிர்த்து.. பெரம்பூரில் களமிறங்கும் பாமகவின் திலகபாமா! அன்புமணியின் மூவ்! -
பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சவுமியா, விருத்தாசலத்தில் தமிழரசி! பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே












Click it and Unblock the Notifications