திருச்செந்தூர் போறீங்களா? நாழி கிணற்று தீர்த்தத்தில் குளிக்க முடியாதாமே!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாழி கிணறு புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால் அதற்கு மாற்று ஏற்பாட்டை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் பெளர்ணமி, அமாவாசை, அஷ்டமி போன்ற கனத்த நாளில் கடல் உள்வாங்கும்.
சில நேரங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீர் கடற்கரையை தாண்டி வெளியே அலையடிக்கும். எனவே இந்த கடற்கரையில் குளிக்கும் பக்தர்கள் ஜாக்கிரதையாக குளிக்க வேண்டும்.
பொதுவாக திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடற்கரையிலும் நாழி கிணற்றிலும் குளித்துவிட்டு முருகனை தரிசிக்க செல்வது வழக்கம். இன்னும் சிலர் கடற்கரையில் இரவு தங்கியிருந்து அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு குளித்துவிட்டு பிறகு சுவாமி தரிசனம் செய்வர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்தால் நிச்சயம் வாழ்வில் நிறைய நல்ல பல மாற்றங்கள் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்காகவே நடிகர்கள், அரசியல்வாதிகள், சின்னத்திரை பிரபலங்கள், பொதுமக்கள் என திருச்செந்தூர் வருகிறார்கள்.
கோயிலுக்கு தெற்கே உள்ள நாழிக் கிணற்றில் பக்தர்கள் நீராடுவர். அதாவது பெரிய கிணற்றுக்குள் ஒரு சிறு கிணறாக ஒரு சதுர அடி பரப்பும் 7 அடி ஆழம் உள்ள இந்த தீர்த்தம், உவப்பு அற்ற நன்னீராகத் திகழ்கிறது.
கடலுக்கு அருகே இருக்கும் போதிலும் இந்த கிணற்று உப்பு கரிக்காமல் இருக்க கந்த பெருமான்தான் காரணம் என்கிறார்கள். இந்த கிணற்றில் நீராடுவோர் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள். கடற்கரையில் இது போல் நிறைய தீர்த்த கிணறுகள் இருந்தும் அவை மணலால் தூர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
சூரபத்மனுடன் போர் முடிந்த பிறகு தனது படை வீரர்களுக்கு தாகம் எடுத்ததை அடுத்து முருகன் தனது வேலால் கிணறு ஒன்றை உருவாக்கினார். அந்த கிணறே நாழிக் கிணறு என அழைக்கப்படுகிறது. 14 அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருப்பு நிறத்திலும் இருக்கும். ஆனால் இந்த கிணற்றுக்கு உள்ளே மற்றொரு கிணறு இருக்கும்.
ஒரு அடி கொண்ட அந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் நல்ல சுவையுடனும் இருக்கும். இதுதான் நாழி கிணற்றின் அதிசயமாகும். இந்த கிணற்றில் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் தீர்த்த தொட்டியில் தீர்த்தம் நிரப்பப்பட்டு அங்கு பக்தர்கள் குளிக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications