கிருஷ்ணகிரி பெண்கள் சிறைக் கைதி மரணம்... என்ன நடந்தது? - வீடியோ
கிருஷ்ணகிரி பெண்கள் சிறையில் கைதியாக இருந்த ரேணுகா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சிறைச்சாலையில் பெண்கள் சிறையில் இருந்த நாமக்கல்லைச் சேர்ந்த பெண் கைதி மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதனால் சிறை வளாகமே பரபரப்பாக உள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள சிறைச்சாலையில் பெண்களுக்கென்று தனிப்பிரிவு உள்ளது. இங்கு நாமக்கல்லைச் சேர்ந்த ரேணுகா என்பவர் கைதியாக இருந்தார். ரேணுகா சில ஆண்டுகளுக்கு முன், போலி பத்திரம் தயாரித்து ஜாமீன் கையெழுத்து போட்ட குற்றத்துக்காக கைதாகி சிறையில் இருந்தார்.

இவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறை நிர்வாகம் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளது. அங்கு ரேணுகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் குணமடைந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
இதையடுத்து, அவரை சிறைக்கு திரும்ப அழைத்து வந்துள்ளனர். ஆனால் நள்ளிரவில் ரேணுகாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் இறந்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications