'மரத்தைத் தூக்கி தலையில போடு’... நிருபர்கள் மீது தாக்குதல் நடத்திய மரம் வெட்டும் தொழிலாளர்கள்
சேலம்: சேலத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்களை மரம் வெட்டுபவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் பங்களா அருகே ஏற்காடு பிரதான சாலையில் உள்ள மரங்கள் வெட்டப் படுவதாகவும், அதனை எதிர்த்து மக்கள் குழு என்ற அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்க விரைந்து சென்றனர். அங்கு சாலையில் இருந்த மரங்கள் வெட்டப் பட்டுக் கொண்டிருந்தன. வெட்டப் படும் மரங்களுக்கு அடியில் அமர்ந்து, சேலம் மக்கள் குழு அமைப்பைச் சேர்ந்த பியூஸ் மானூஸ் என்பவர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, போராட்டம் நடத்திய பியூஸ் மானுஸ் என்பவர் மீது மரம் வெட்டும் நபர்கள் தாக்குதல் நடத்தி அவரை இழுத்துத் தள்ளினர். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இந்தக் காட்சிகளை பத்திரிக்கையாளர்கள் தங்கள் கேமராவில் பதிவு செய்தனர். அதனைக் கண்டு ஆத்திரமடைந்த மரம் வெட்டுபவர்கள் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
அதோடு, ‘மரத்தை எடுத்து தலையில் போடுவோம்' என மிரட்டிய மரம் வெட்டுபவர்கள், தகாத வார்த்தைகளாலும் பத்திரிக்கையாளர்களைத் திட்டினர்.
இது தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் புகார் அளித்தனர். சம்பவம் நடைபெற்ற போது அருகில் காவலர்கள் இருந்த போதும், இந்த தாக்குதல் சம்பவத்தை அவர்கள் தடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதோடு, மரங்களை வெட்டி தாக்குதலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்ளிட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள் என்று பத்திரிக்கையாளர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சேலத்தின் மரங்கள் அடர்ந்த மரங்கள் இருக்கும் அகலமான சாலை சேலம் ஏற்காடு சாலை. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் அண்மையில் முடிவுசெய்து டெண்டர் விட்டது. டெண்டரை எடுத்த உள்ளூர் திமுக பிரமுகர் தற்போது மரம் வெட்டும் நடவடிக்கையில் அவர் இறங்கியுள்ளார்.பல ஆண்டுகள் வளர்ந்துள்ள மரங்களை வெட்டி, ஏற்கெனவே அகலமாக இருக்கும் சாலையை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications