'விகடன்' பாலசுப்பிரமணியன், 'இந்து' எம்.சி. சம்பத் மறைவுக்கு ரிப்போர்ட்டர்ஸ் கில்டு இரங்கல்
சென்னை: விகடன் குழுமத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், 'இந்து' நாளேட்டின் ஓய்வு பெற்ற சீனியர் அசோசியேட் எடிட்டர் எம்.சி. சம்பத் ஆகியோர் மறைவுக்கு ரிப்போர்ட்டர்ஸ் கில்டு இரங்கல் தெரிவித்துள்ளது.
ரிப்போர்ட்டர்ஸ் கில்டு தலைவர் ரங்கராஜ், செயலாளர் டி. சேகர் ஆகியோர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:
விகடன் குழுமத்தின் நவீனத்தைப் புகுத்திய எஸ். பாலசுப்பிரமணியன், தமிழக பத்திரிகையாளர்களின் முன்னோடியாக திகழ்ந்தவர். தமிழக அரசால் அவர் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஆதரவாக ரிப்போர்ட்டர்ஸ் கில்டு முன்னணியில் நின்று போராட்டங்களை நடத்தியது.

இதற்காக ரிப்போர்ட்டர்ஸ் கில்டு நிர்வாகிகளை தமது படப்பை பண்ணை இல்லத்துக்கு அழைத்து தாமே சமைத்து விருந்து படைத்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல் 50 ஆண்டுகாலம் இந்து பத்திரிகையில் சீனியர் அசோசியேட் எடிட்டராக பணியாற்றிய எம்.சி. சம்பத் 2012ஆம் ஆண்டு ஓய்வு பெறார். இந்து நாளேட்டில் பல்வேறு பொறுப்புகளை வகித்து இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்.
ரிப்போர்ட்டர்ஸ் கில்டு அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்து செயலாற்றியவர். அவர் கடந்த 20-ந் தேதி மாரடைப்பால் 78 வயதில் காலமானார். அவரது மறைவுக்கும் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications