வாக்கு இயந்திர பாதுகாப்பு - வேட்பாளர்களின் பிரநிதிகளுக்கு மட்டுமே அனுமதி
நெல்லை: நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு அனுமதி அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை பார்லி தொகுதியில் பதிவான வாக்குகள் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியிலும், தென்காசி தொகுதி வாக்கு பதிவு இயந்திரங்கள் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும், தூத்துக்குடி தொகுதி வாக்கு பதிவு இயந்திரங்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சட்ட சபை தொகுதி வாரியாக 6 அறைகளில் இயந்திரங்கள் தனி தனியாக வைக்க.ப்பட்டுள்ளன. அங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அந்த அறையை சுற்றிலும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆயுதப்படை, கல்லூரியை சுற்றிலும் உள்ளூர் போலீசார் மற்று்ம் எஸ்பி, சிஐடி, உளவுப்பிரிவு போலீசார் என பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒரு தடவை மாற்றம் செய்யப்படுகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு டிவியில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் எதிரே வாக்கு எண்ணுவதற்காக வசதியாக மேஜைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கட்சி பிரதிநிதிகள் பார்வையிடுவதற்காக வசதியாக கம்பி வலைகள் பொருத்தப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் தங்கள் கட்சி சார்பில் 8 மணி நேரத்திற்கு் ஒருவர் வீதம் மாற்று நபர் உள்பட 4 பேரை பாதுகாப்புக்காக நிறுத்த கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அறை மணி நேரத்திற்கு ஓரு தடவை வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை இவர்கள் பார்வையிடலாம். மற்ற நேரங்களில் டிவியில் கண்காணித்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications