சென்னை ராமாபுரத்தில் காசிமேடு மீனவர் குழுவால் நூற்றுக்கணக்கானோர் மீட்பு
சென்னை: சென்னை - ராமாபுரம் வெள்ளம் சூழந்த பகுதிகளில் கடந்த இரு நாட்களாக காசிமேடு மீனவர் குழுவால் ஏறத்தாழ 500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் ராமாபுரத்தின் சத்யா நகர், ராயலா நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தன. அந்தப் பகுதிகளில் புதன்கிழமையன்று நள்ளிரவு வரை முதல் மாடி அளவில் வெள்ளம் சூழ்ந்தன. தரைதளத்தில் உள்ளவர்கள் முதல் மாடி, இரண்டாவது மாடிகளில் தஞ்சம் புகுந்தனர்.

ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் உள்ள காதுகேட்காதோர், வாய் பேச முடியாதோர் பள்ளியில் சிக்கியிருந்த சுமார் 100 மாணவர்களை போலீஸார் பாதுகாப்பாக படகுகள் மூலம் மீட்டனர்.
அதேநேரத்தில், நேற்று மாலை முதலே சென்னை காசிமேடு அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் கொண்ட குழு 6 படகுகள் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் 500க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இன்று மாலை நிலவரப்படி, சத்யா நகரின் பெரும்பாலான இடங்களில் இடுப்பளவு தண்ணீரும், உள் பகுதியில் மார்பளவு தண்ணீரும் தேங்கியிருந்தன. செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பதால், ராமாபுரம் பகுதியில் வெள்ளம் வெகுவாக வடிந்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 48 மணி நேர கனமழை விவரத்தைக் கூறி, அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்துக்கு படகுகள் மூலம் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ராமாபுரம் பகுதி முழுவதும் தொடர்ந்து மின்சாரம், செல்போன் நெட்வோர்க் முடங்கியுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications