மருத்துவ மேல்படிப்பில் 50% இடஒதுக்கீடு.. கிடைக்குமா.. கிடைக்காதா.. நாளை சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
மருத்துவ மேல்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: மருத்துவ மேற்படிப்பு படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின்படி தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படியே அரசு மருத்துவர்களின் சேர்க்கை இருக்கும் என்று தீர்ப்பு கூறினார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சென்றது. அங்கு விசாரணைகள் நடைபெற்றன.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் பின்னர்தான் இடஒதுக்கீடு கிடைக்குமா கிடைக்காதா என்பது தெரிய வரும்.
இந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் மேல்படிப்பு படிக்கும் மருத்துவ மாணவர்கள் 15 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 50 சதவீத ரத்தால் கிராமப்புறங்களில் பணி புரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications