நத்தம் பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவின் பெயரா? கலெக்டரிடம் திமுக புகார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சூட்ட அதிமுகவினர் முயற்சிப்பதாக அம்மாவட்ட ஆட்சியரிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம் வெற்றி பெற்றார். அவர் தனது தொகுதியான நத்தம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார். மேலும், நான்கரை கோடி ரூபாய் செலவில் அந்த பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டது.

Resistance to Jeyalitha's name for Bus stand

முன்னதாக அந்த பேருந்து நிலையம் காமராஜர் பெயரில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது காமராஜர் பெயரை நீக்கிவிட்டு, புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பெயரை அதிமுகவினர் சிலர் முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடம் திமுகவினர் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+