நிர்மலா தேவி விவகாரத்தில் நடந்தது என்ன?... விசாரணையைத் தொடங்கினார் அதிகாரி சந்தானம்!
பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை உயர்அதிகாரிகளின் பாலியல் ஆசைக்கு இணங்க வைக்க முயற்சித்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் நியமித்த சந்தானம் ஒரு நபர் குழுவின் விசாரணை தொடங்கியுள்ளது.
Recommended Video

மதுரை: பேராசிரியை நிர்மலா விவகாரம் குறித்து ஆளநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் மதுரையில் விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்ற போது தம்மை அணுகிய அதிகாரிகள் மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் படிப்பில் சலுகையும், பண உதவியும் செய்வதாகக் கூறியதாக பேராசிரியை நிர்மலா அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் தொலைபேசியில் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்தில் நடந்த இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திட்ம் புகார் அளித்தும் ஒரு மாதத்திற்கு பிறகு அவர் மீது தற்காலிக பணியிடை நீக்கம் மட்டுமே செய்தது.

இதனையடுத்து மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசிய தொலைபேசி ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதையடுத்து பிரச்னை விஸ்வரூபமெடுத்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர்களோடு, ஆளுநர் பெயரும் இந்த ஆடியோவில் இடம்பெற்றதால் பிரச்னை பூதாகரமானது.
இதனையடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த விசாரணைக்குழுவை ரத்து செய்துவிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக்குழுவிற்கு உத்தரவிட்டார். இந்நிலையில் அதிகாரி சந்தானம் இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணையை தொடங்கியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்றுள்ள அவர் முதற்கட்டமாக பதிவாளர் சின்னையாவிடம் விசாரணையை தொடங்கியுள்ளார். மாணவிகள் புகார் அளித்தும் காலதாமதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன், நிர்மலா தேவியுடன் தொடர்புடைய பேராசிரியர்கள் யார் யார் என்றும் சந்தானம் விசாரணை நடத்துகிறார்.
இன்று முதல் 3 நாட்களுக்கு சந்தானம் மதுரையில் தங்கி விசாரணை நடத்த உள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளி பேராசிரியை நிர்மலா தேவி சிறையில் இருப்பதால் அவருக்கு கேள்விகள் அளித்து அதற்கு விளக்கம் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே நிர்மலாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி டிஎஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications