மக்களே நீச்சல் கத்துக்கங்க மக்களே... வாரிசுகளுக்கு பயிற்சி தரும் கருணாநிதி, சோனியா, லாலு
சென்னை: அரசியல் என்பது கடல்போல அதில் எதிர்நீச்சல் போடத்தெரிந்தவர்தான் ஜெயிக்க முடியும், அதை கருத்தில் கொண்டுதானோ என்னவோ அரசியல் தலைவர்கள் தங்கள் காலத்திற்குப் பின்னர் அரசியலில் கோலோச்ச இப்போதிருந்தே பயிற்சி தருகின்றனர்.
அதை சித்தரிக்கும் வகையில், ஹெட்லைன்ஸ் டுடே நீச்சல் பயிற்சி அளிக்கும் அரசியல் தலைவர்களை கிண்டலடிக்கும் வகையில் அனிமேசன் படம் ஒன்றினை யுடுயூப்பில் வெளியிட்டுள்ளது.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில் வெளியிட்டுள்ள அனிமேசன் கூலாக இருக்கிறது.

வாரிசு அரசியல்
நேரு பரம்பரை மட்டுமல்ல மாநில அளவில் உள்ள கட்சித்தலைவர்களும் வாரிசுகளை களமிறக்கியுள்ளன. சோனியா, முலாயம்சிங் யாதவ், கருணாநிதி, லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரும் தங்களின் வாரிசுகளை தேர்தலில் களமிறக்கியுள்ளனர்.

நீச்சல் கத்துக்கங்க மக்களே
இவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொடுக்கின்றனர்.

அகிலேஷ் யாதவ்
முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் நீச்சலை விரைவில் கற்றுக் கொண்டு, நீந்தவே தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கருணாநிதி வாரிசு சண்டை
கருணாநிதி தனது மகன் ஸ்டாலினுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கிறார்.

கட்டையை நீட்டிய அழகிரி
ஸ்டாலின் டைவ் அடிக்கப் போகும் போது அழகிரி கட்டையை நீட்டவே, தண்ணீரில் விழுவதற்கு பதில் தொபுக்கடீர் என்று கட்டையிலேயே விழுந்து அடிபடுகிறார் ஸ்டாலின்.

முன்னேற விடுவேனா?
ஸ்டாலினும், அழகிரியும், மாறி மாறி சண்டை போடவே, கருணாநிதி வந்து சமாதானம் செய்கிறார். அப்படியும் சமாதானம் ஆகாமல் போகவே அழகிரியை வெளியேற்றுகிறார் கருணாநிதி.

ராம்விலாஸ் பஸ்வான்
லோக்ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் முதலில் நீச்சல் குளத்தில் குதித்து தனது மகன் சிராக் பஸ்வானை குதிக்கச் சொல்கிறார். அவரோ அப்பாவை மிஞ்சிய மகனாக அவர் மீதே குதித்துவிடுகிறார்.

திக்விஜய் சிங் மகன்
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் தனது மகன் ஜெய்வர்தன் சிங்கை நீச்சல் பழக்க தள்ளிவிடுகிறார். ஆனால் நீச்சல் குளத்தில் அவரின் உடை அவிழ்ந்ததுதான் மிச்சம்.

லாலு வாரிசுகள்
பீகாரில் லாலு பிரசாத் யாதவ் தனது மகன், மகளை களம் இறக்கியுள்ளார். அவர்கள் நீச்சல் குளத்தில் இறங்க அஞ்சினாலும் கஷ்டப்பட்டு தள்ளிவிட்டு நீச்சல் பழக்குகிறார் லாலு.

நானே போக மாட்டேன்…
சோனியா காந்தியின் மகன் ராகுல்காந்தி நீச்சல் குளத்தில் இறங்க மறுத்து அடம் பிடிக்கிறார். அவரை கஷ்டப்பட்டு தள்ளுகிறார் சோனியா.

பாதுகாப்பு நடவடிக்கை
ஆனாலும் கரையேறிவந்து ஓய்வெடுக்கிறார் ராகுல். நீச்சல் பயிற்சிக்குத் தேவையான பாதுகாப்பு சாதனங்களை அம்மாவும், அக்கா பிரியங்காவும் அணிவித்து நீச்சல் பழக கட்டாயப்படுத்துகின்றனர்.

இப்படித்தான் நீச்சல்
ராகுலின் கையை பிடித்து கூட்டி வரும் சோனியா, இப்படித்தான் நீச்சலடிக்கணும் என்று பயிற்சி கொடுக்கிறார்.

மாட்டேன் போ
ஆனாலும் ராகுலால் முடியாமல் போகவே அம்மாவின் இடுப்பில் ஏறி அமர்ந்து கொள்கிறார் ராகுல்.

அம்மாவின் கவலை
மகனின் செயலைக் கண்டு சோனியாவிற்கும், பிரியங்காவிற்கும் கவலை ஏற்படுகிறது. கன்னத்தில் கைவைத்து சோககீதம் பாடுகின்றனர்.

ரோஷம் வந்துருச்சே…
பின்னர் ஒருவழியாக தானாக நீச்சல் குளத்தில் குதித்து கற்றுக்கொள்கிறார் ராகுல்.

துள்ளிக்குதிக்கும் சோனியா
இதைக்கண்டு சோனியாவும், பிரியங்காவும் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கின்றனர். இந்த தேர்தல் அனிமேசன் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications