நெல்லை: குடோனுக்கு சென்ற லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்து பாழ்
நெல்லை: பாளையிலிருந்து குடோன்களுக்கு அரிசியை ஏற்றி சென்ற லாரியிலிருந்த அரிசி மூட்டைகள் ரோட்டில் தவறி விழுந்து வீணானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய உணவு கழகத்தி்ற்கு சொந்தமான குடம் பாளை ஸ்ரீபுரத்தில் உள்ளது. நெலலைக்கு சரக்கு ரயில்களில் கொண்டு வரப்படும் அரிசி மூட்டைகள் இந்த குடோன்களில் இறக்கி வைக்கப்படுகின்றன. அங்கிருந்த மாநகரத்தில் உள்ள மற்ற குடோன்களுக்கு அவை கொண்டு செல்லப்படும்.
பாளை சராள்தாக்கல் கல்லூரி அருகே உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு அரிசி மூட்டைகள் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு வரப்பட்டன. அவை கல்லூரி அருகே உள்ள திருப்பத்தில் கவன குறைவாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் சாலைகளில் விழுந்து சிதறின. ஓரிரு மூட்டைகள் உடைந்து சாலைகளில் அரிசி கொட்டியது.
சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் பலர் வறுமையில் மடியும் நிலையில் உலகம் இருக்கையில், இவ்வாறு பொது வினியோக திட்டத்தில் கொண்டு செல்லப்படும் சாப்பாட்டு அரிசி வீணானதைக் கண்டு அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். மேலும், சிதறிய அரிசி மூட்டையிலிருந்து வீணான அரிசியை அங்கிருந்து உடனடியாக அகற்ற லாரி டிரைவர்களோ, குடோன் பொறுப்பாளர்களோ நடவடிக்கை எடுக்க வில்லை..
அத்தோடு, லாரிகளில் மேலும் சில மூட்டைகள் கிழே விழும் நிலையிலேயே குடோன்களுக்கு புறப்பட்டுச் சென்றன அந்த லாரிகள். இது போன்ற அரிசி மூட்டைகள் உள்ளிட்டவற்றை மூடிய லாரிகளில் கொண்டு செல்லாமல் அரை லோடு லாரிகளில் வெயில், மழைகளில் கொண்டு செல்வதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications