தமிழர்களை போல வேறு யாராலும் அமைதியாக போராட முடியாது.. ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ்
மெரினாவில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழர்களை போல வேறு யாராலும் இந்த அளவுக்கு அமைதியாக போராட முடியாது என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் நேற்று காலை தொடங்கிய போராட்டம் நள்ளிரவை தாண்டியும் நடந்து வருகிறது. போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் மத்திய அரசு மற்றும் பீட்டா அமைப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்து தங்களுடன் பேசும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். மெரினா போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நள்ளிரவில் போராட்ட களத்திற்கு வந்தனர்.
அப்போது இளைஞர்கள் மத்தியில் பேசிய பாலாஜி, அனைத்து பிரச்சினைக்கும் இதே போன்ற ஒருமித்த குரலுடன் இணைந்து போராட வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு இனி இளைஞர்கள் தொடர்ந்து போராடுவார்கள். தமிழர்களை போல வேறு யாராலும் இந்த அளவுக்கு அமைதியாக போராட முடியாது.
போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. கண்ணாடி எதையும் உடைக்கவில்லை. மது அருந்தவில்லை. அமைதி வழியில் போராடி வருவதாக அவர் கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications