வேட்பாளருக்கே துட்டு கொடுத்து பல்பு வாங்கிய திமுக... ஆர்கே நகர் காமெடி பார்ட் 2!!

Subscribe to Oneindia Tamil

ஆர்கே நகர் இடைதேர்தலையே ரத்து செய்துவிட்டது தலைமை தேர்தல் ஆணையம். வெள்ளமாய் ஓடிய கரன்சியின் விளைவுதான் இது. பிரசாரம் தொடங்கியதில் இருந்தே கவனித்து வந்த தினகரன் அணியினர் கடந்த 5, 6, 7 தேதிகளில் வேகம் எடுத்தனர். தொகுதியையே கரன்சியால் கவர் செய்தனர்.

கடைசி கட்ட பட்டுவாடா தான் காப்பாற்றும் என்பது தெரியாதா உடன்பிறப்புகளுக்கு? தொப்பி ஆட்கள் கொடுத்த சில மணி நேரங்களிலேயே வீடுகளில் புகுந்து பட்டுவாடாவை தொடங்கியது திமுக.

RK Nagar DMK comedy

இந்த முறை திமுக சார்பில் பட்டுவாடா செய்தது எல்லாம் வெளியூர் ஆட்கள். உள்ளூர் ஆட்களை வைத்துக் கொடுத்தால் பாதி கூட போய்ச் சேராது என்பதால் வெளியூர் ஆட்களை வைத்து பட்டுவாடா நடத்தியது திமுக.

இதில்தான் பல காமெடிகள் அரங்கேறின. தினகரன் ஆட்கள் வாக்காளர் பட்டியலை கையில் வைத்து பட்டுவாடாவை நடத்தியது. திமுக ஆட்கள் அந்தப் பட்டியல் இல்லாமல் லோக்கல் ஆட்களையும் அருகில் வைத்துக்கொள்ளாமல் சகட்டுமேனிக்கு பணம் கொடுத்ததால் தினகரன் ஆதரவு நிர்வாகிகளுக்கே பட்டுவாடா செய்யப்போய் துரத்தியடிக்கப்பட்டனர்.

இதை விட பெரிய காமெடியாக ஒரு சுயேட்சை வேட்பாளரின் வீட்டுக்கே சென்று அவருக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள் திமுகவினர். அவர் 'நான் கேண்டிடேட்டுங்க'.. என்று சிரித்திருக்கிறார்.

இன்னொரு இடத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ வுக்கு பணம் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.

தினகரனுக்கு சாதகமான சூழல் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், இப்படி பட்டுவாடாவிலும் பல்பு வாங்கியிருக்கிறது திமுக!

- ஆர்ஜி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+