செல்லில் பேசியபடி வண்டி ஓட்டாதீங்க... குமரியில் மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 10-ந்தேதி முதல் நடந்து வருகிறது. இன்று வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
போக்குவரத்து போலீசார் மற்றும் நாகர்கோவில், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிகளில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்க்க அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே நாகர்கோவில் நடுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலந்து கொண்டார். அவர் பஸ், கார்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது.
இருசக்கர வாகனங்கள் ஓட்டும்போது ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும். செல்போன் பேசிக்கொண்டோ, குடிபோதையிலோ வாகனம் ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் மட்டும்தான் பயணம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications