அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகனை கைது செய்யுங்கள்: ஆளுநர் அலுவலகம் முன் ரொபினா தர்ணா

அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியை கைது செய்யுங்கள் என்று கோரி ஆளுநர் அலுவலகம் முன்பு ரொபினா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்பி அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலியை கைது செய்யுங்கள் என்று கோரி ஆளுநர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் மேற்கொண்ட ரொபினாவை போலீஸார் கைது செய்து விடுவித்தனர்.

அதிமுக எம்பியாக இருப்பவர் அன்வர் ராஜா. இவரது மகன் நாசர் மீது சென்னையை சேர்ந்த ரொபினா கடந்த 23-ஆம் தேதி போலீஸில் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

அதில், நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 மாதம் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். மேலும் தன்னிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணத்தையும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருப்பதாகவும் அந்த பெண் கூறினார்.

திருமணம்

திருமணம்

தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு தனது பணத்தை ஏமாற்றிவிட்டு தற்போது வேறு ஒரு பெண்ணை நாசர் மார்ச் 25-ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டால் நாசரும் அவரது தந்தை அன்வர் ராஜாவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

கடந்த 25-ஆம் தேதி நாசர் அலிக்கு காரைக்குடியில் பள்ளிவாசல் முன்பு போராட்டம் நடத்திய ரொபினா அவரது திருமணத்தை நிறுத்துமாறு ஜமாத்திடம் வலியுறுத்தினார். இதையடுத்து அவர் மீது போலீஸில் புகார் அளித்தார்.

தர்ணா போராட்டம்

தர்ணா போராட்டம்

இந்நிலையில் ரொபினா திடீரென ஆளுநர் மாளிகை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரொபினார், தான் புகார் அளித்தும் நாசர் அலியை போலீஸார் கைது செய்யவில்லை என்றும் அவர் நாளை முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ரொபினா கூறினார்.

டுவிட்டரில் தகவல்

இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படாத ரொபினாவை கைது செய்த போலீஸார் கிண்டியை அடுத்த மடுவங்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்திருந்ததாகவும் தற்போது விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் ரொபினா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+