For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரவுடி ஆனந்தன் என்கவுன்டர்.. போலீஸ் மீது மனைவி புகார்.. மாஜிஸ்திரேட் விசாரணை ஆரம்பம்

ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் தொடர்பாக நீதிபதி சாண்டில்யன் தலைமையில் விசாரணை தொடங்கி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் போலீசார் நடத்திய என்கவுண்டரில், ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொலை

    சென்னை: ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் தொடர்பாக நீதிபதி சாண்டில்யன் தலைமையில் விசாரணை தொடங்கி உள்ளது.

    நேற்று இரவோடு இரவாக ரவுடி ஆனந்தன் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டான். போலீசை தாக்கி கொலை முயற்சி செய்தது உட்பட இவன் மீது பல வழக்கு நிலுவையில் உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு ராயப்பேட்டை போலீஸ் ராஜவேலுவை தாக்கிய சம்பவத்திற்கு பின் போலீஸ் இவனை 24 மணி நேரமாக வலை வீசி தேடியது.

    Rowdy Anandan Encounter: The magistrate begins the trial

    இவன் நண்பர்கள் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு போலீசை தாக்கியதால், போலீஸ் இவனை என்கவுண்டர் செய்தது.

    பொதுவாக என்கவுண்டர் நடக்கும் பட்சத்தில், அதுகுறித்து உடனடியாக நீதி விசாரணை நடத்தப்படும். என்கவுண்டர் எதற்காக செய்யப்பட்டது, என்கவுண்டர் செய்ய தேவை என்ன என்று விசாரிக்கப்படும். இந்த என்கவுண்டரில் அதேபோல் விசாரணை நடக்க உள்ளது.

    இந்த நிலையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட ஆனந்தின் மனைவி காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார். போலீஸ் என்கவுண்டர் சம்பவத்தில் நிறைய பொய் சொல்வதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

    இந்த நிலையில் ரவுடி ஆனந்தன் என்கவுன்டர் மாஜிஸ்திரேட் விசாரணை ஆரம்பமாகி உள்ளது. நீதிபதி சாண்டில்யன் என்கவுண்டர் பற்றி விசாரிக்க உள்ளார்.

    English summary
    Rowdy Anandan Encounter: The magistrate begins the trial after Anandan wife complaints about police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X