கொலை செய்த உடலை ரவுடி பினு என்ன செய்வான் தெரியுமா? அதிரவைக்கும் கொடூர தகவல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சினிமா பாணியில் கொலை செய்யும் பினு...அதிரவைக்கும் கொடூர தகவல்கள்!- வீடியோ

  சென்னை: ரவுடி பினு தான் கொலை செய்யும் நபர்களின் அடையாளம் தெரியாமல் இருக்க தலையை மட்டும் துண்டித்து எரித்துவிடும் ஸ்டைலை கடைபிடித்து வந்துள்ளான்.

  நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு சென்னையில் உள்ள ஒட்டுமொத்த ரவுடிகளையும் அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளான். மேலும் தொழில் தனக்கு போட்டியாக உள்ள ராதாகிருஷ்ணன், மற்றும் சிடி மணி ஆகிய இருவரை அந்த பார்ட்டிக்கு அழைத்து போட்டுத்தள்ளவும் திட்டம் போட்டுள்ளான் பினு.

  இதனை அறிந்த அந்த இருவரும் பார்ட்டிக்கு வராமல் தப்பியுள்ளனர். இந்நிலையில் தான் இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸ் சம்பவ இடத்துக்கு சென்று ஒட்டுமொத்த ரவுடிகளையும் அள்ளியது.

  கை தேர்ந்தவர் பினு

  கை தேர்ந்தவர் பினு

  இந்நிலையில் ரவுடி பினு குறித்த முக்கிய தகவல்களும் அவரது கொலை ஸ்டைல் குறித்தும் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பினு ஆட்களை கடத்தி பணம் பறிப்பதில் கை தேர்ந்தவர் ஆவார்.

  சொந்த ஊருக்கு சென்ற பினு

  சொந்த ஊருக்கு சென்ற பினு

  பினு மீது ஆட்கடத்தல் மட்டுமின்றி 8 கொலை வழக்குகளும் உள்ளன. சூளைமேட்டில் வசித்து வந்த பினு

  கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாத காரணத்தால் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

  அசுர வளர்ச்சியடைந்த ராதா

  அசுர வளர்ச்சியடைந்த ராதா

  இதனால் தனது தொழிலை சில காலம் நிறுத்தி வைத்து இருந்தார். இந்த கேப்பில்தான் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் சூளைமேடு பகுதிகளில் புகுந்து கட்ட பஞ்சாயத்து ஆட் கடத்தல், கொலை உள்ளிட்டவைகளை செய்து வந்துள்ளார்
  இதில் அசுர வளர்ச்சியடைந்தார் ராதாகிருஷ்ணன்.

  தீர்த்துக்கட்ட முடிவு

  தீர்த்துக்கட்ட முடிவு

  கூலிப்படை தலைவனாகவும் இருந்து வந்துள்ளார் ராதாகிருஷ்ணன். மேலும் மற்றொரு ரவுடியான மணியும் வளர்ச்சி அடைந்து வந்துள்ளார். இதனால் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார் பினு.

  தலையை துண்டித்து..

  தலையை துண்டித்து..

  பினுவின் கொலை செய்யும் ஸ்டைல் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. கொலை செய்யும் நபரின் தலையை துண்டித்து முகத்தை சிதைத்து விடுவானாம் ரவுடி பினு.

  முகத்தை எரித்து..

  முகத்தை எரித்து..

  பின் அந்த முகத்தை எரித்து விடுவானாம். கொலை செய்யப்பபட்டவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுவதற்காகவும் தனது கொடூர கொலை ஸ்டைல் குறித்து அனைவரும் பேசவேண்டும் என்பதற்காகவும் இதுபோன்று கொலை செய்வதை பின்பற்றி வந்துள்ளார் பினு.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rowdy Binu was following a style in murders. Binu will damage the face and burn the behead.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற