'பில்ட்-அப்' புகழ் புல்லட் நாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
குண்டர் சட்டத்தில் ரவுடி புல்லட் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

தேனி: "என் ஜெயில் அனுபவம்தான் உன் வயசு" என்று பெண் எஸ்.பி.க்கு "உதார் ஆசாமி" புல்லட் நாகராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரிய குளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ் தன்னை மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
[ பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தேவஸ்வம் போர்டின் பொறுப்பு- கேரள அமைச்சர் ]

வாட்ஸ் அப் மிரட்டல்
அடிக்கடி ஜெயிலுக்கு போய்ட்டு வருவதையே வாடிக்கையாக வைத்திருந்தார். தான் ஒரு வக்கீல் என்றும் பத்திரிகையாளர் என்றும் ஊருக்குள் சொல்லிக் கொண்டு திரிந்தார். ஒரு சொந்த பிரச்சனை காரணமாக, மத்திய சிறை எஸ்.பி. ஊர்மிளாவுக்கு வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்திருந்தார்.

பொம்பளையா இருக்கீங்க...
"தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயிலே கிடையாது. இனிமே புதுசா கட்டினாத்தான் உண்டு. மதுரை ஜெயிலைப் உன்னைவிட பெரிய ஆபிசர் எல்லாம் நான் பாத்திருக்கேன். என் ஜெயில் அனுபவம் உன் வயது. நான் ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா பசங்க ஏதாச்சும் பண்ணுனா... அதுக்கு நான் பொறுப்பில்ல... பொம்பளையா இருக்கீங்க... திருந்துங்க... என்று பேசி மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஃபேமஸ் ஆகிவிட்டார்.

புலி எலியாகிவிட்டது
இதையடுத்து போலீசார் விசாரணையில் அதிரடியாக இறங்க... புல்லட் நாகராஜன் பேசியது எல்லாம் வெறும் பில்ட்-அப் என தெரியவர.. கடைசியில் புலி எலியாகி சிறைக்குள் முடங்கிபோய்விட்டது. திருச்சி சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது
இந்நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. புல்லட் நாகராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து "புல்லட்" மீது குண்டர் சட்டம் பாய்ந்து கம்பி எண்ணுவது நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications