பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தேவஸ்வம் போர்டின் பொறுப்பு- கேரள அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வரவேற்றார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.

ஆண், பெண் இருவரும் சமம் என்பதால் கோயிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை நேற்று அளித்துள்ளது. இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

கோயிலுக்குள் அனுமதி

கோயிலுக்குள் அனுமதி

இந்நிலையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில் பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பது என்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

தீர்ப்பை அமல்படுத்துவது திருவாங்கூர் தேவசம் போர்டின் பொறுப்பாகும். ஐயப்பனை தரிசிக்க வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பையும் அந்த போர்டு உறுதி செய்ய வேண்டும்.

ஆண், பெண் வேறுபாடு

ஆண், பெண் வேறுபாடு

பெண்களை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற விஷயத்தில் தற்போதைய இடதுசாரி அரசு ஆதரவாகவே இருந்திருக்கிறது. கேரள மாநில அரசின் நிலைப்பாடு சபரிமலை கோயிலுக்கு மட்டும் இல்லை. எந்த வழிப்பாட்டு தலங்களிலும் ஆண், பெண் வேறுபாடு பார்க்கக் கூடாது என்பதுதான் என்றார்.

ஏற்பாடு

ஏற்பாடு

கோயிலின் தாந்திரி கண்டராரூ ராஜீவாரு கூறுகையில், இந்த தீர்ப்பு எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். தற்போதைய சூழலில் பெண்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்துவது என்பது சிரமமான காரியம். எனினும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+