ராமநாதபுரம் அருகே போலீஸ் என்கவுண்டர்.. பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார்!
ராமநாதபுரம் அருகே பிரபல ரவுடி கோவிந்தன் என்பவரை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிரபல ரவுடி கோவிந்தன் என்பவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட கோவிந்தன் மீது 17 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் சபரியாபட்டினத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். சிறு சிறு வேலை செய்து வந்த இவர் ரவுடியாகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வழிப்பறி, கொலை, கொள்ளை என பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே தொண்டியில் ரவுடி கோவிந்தன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பி சென்றுள்ளார். அப்போது சங்கிலிப் பறிப்பை தடுத்த போலீசாரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அவனை என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர். கோவிந்தன் மீது 17 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications