ஓசூரில் ரவுடி தலையை வெட்டி கொடூரமாக கொன்ற கும்பல் - போலீஸ் விசாரணை

ஓசூரில் ரவுடியை கடத்திச் சென்று தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஓசூரில் பிரபல ரவுடியும் ஹோட்டல் உரிமையாளருமான பிரேமை கத்தியால் குத்தி காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல் அவரது தலையை துண்டித்து காட்டுக்குள் வீசி சென்றுள்ளது.

ஓசூர் சமத்துவ புரம் பகுதியில் வசித்து வந்தவர் சேட்டு(எ)பிரேம் நவாஸ்,40. இவர் ஓசூர் ராம்நகரில் தாஜ் உணவு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இவர் பிரபல ரவுடியாவார். நேற்று காலை தன் வீட்டிலிருந்து உணவகத்துக்கு புறப்படும் போது காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை கடத்திச் சென்றது.

Rowdy hacked to death in Hosur

இது குறித்து சேட்டுவின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் ஹட்கோ போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஓசூரை அடுத்த நல்லஹான கொத்தனபள்ளி கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் வாலிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து சூளகிரி போலீஸார் அங்குச்சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தலைத்துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தது நேற்று காலையில் காரில் கடத்தப்பட்ட சேட்டு என தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டது.

காரில் சேட்டுவை கடத்திய கும்பல் அவரை தனியிடத்துக்கு கொண்டுச்சென்று காலை வெட்டி பின்னர் அவரது கைகளை கட்டி தலையை தனியாக துண்டித்து கொன்றுவிட்டு தலையை அவரது காலடியில் வீசிவிட்டு சென்றுள்ளது.

கொலை செய்யப்பட்ட சேட்டு 2008ஆம் ஆண்டு தேன்கனிக்கோட்டை ரியல் எஸ்டேட் அதிபர் வசந்தன் கொலை வழக்கிலும், கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இரும்பு வியாபாரி முஸ்தாக் கொலையிலும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இவைதவிர, சேட்டு மீது ஓசூர் காவல்நிலையத்தில் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன.

போலீஸ் நடத்திய விசாரணையில் சேட்டுவிற்கும், பிரபல ரவுடி கோபிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் சேட்டுவை கடத்திச் சென்று ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிப்பள்ளி அடுத்துள்ள நல்லகாணகொத்தபள்ளி என்ற இடத்தில் சடலமாகக் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலைதுண்டிக்கப்பட்டு சேட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

சேட்டுவின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஓசூரில் கொலைகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+