சங்கரன்கோவிலில் பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை: பதட்டம்
நெல்லை: தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி சங்கரன்கோவிலில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பி.எஸ். நகரில் வசித்து வந்தவர் கண்ணன். தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி என கூறப்படுகிறது. அவர் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே கீர்த்தனா பாலிமர் என்ற பெயரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் நடத்தி வந்தார்.

நேற்று மாலை 5 மணி அளவில் கண்ணன் தனது நிறுவனத்தில் வழக்கம்போல் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது இரண்டு வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 15 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரது கடைக்குள் நுழைந்தது. இதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தடுக்க முயன்ற காவலாளிகளை அந்த கும்பல் மிரட்டியது.
பின்னர் உள்ளே நுழைந்த கும்பல் கண்ணனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் கிடைத்ததும் பொறுப்பு டிஎஸ்பி ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றினர்.
உடலை சங்கரன்கோவிலிலேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறி்தது சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையான கண்ணன் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. இதனால் அங்கு பதட்டம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications