புதுக்கோட்டை அருகே மூட்டை மூட்டையாய் ரூ.18 கோடி நட்சத்திர ஆமைகள்.. 3 பேர் கைது
18 கோடி ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 18 கோடி ருபாய் மதிப்புடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அது சம்பந்தமாக 3 பேரையும், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை வழியாக நட்சத்திர ஆமைகள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, அவர்கள் திருச்சி புதுக்கோட்டை சாலையில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றது.

இதனால் வருவாய் புலனாய்வுத்துறை போலீசார் அந்த காரை துரத்தி சென்றனர். அந்த கார் புதுக்கோட்டை சிப்காட் அருகேயுள்ள ரெங்கம்மாசந்திரம் அருகே உள்ள ஒரு குடோனில் சென்று நின்றது. இதனையடுத்து காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் பதில் அளிக்கவே அவர்களது காரையும் குடோனையும் சோதனை செய்தனர்.
அதில் கூடை கூடையாக நட்சத்திர ஆமை இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த அமீன், புரோகான், சையது ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச அளவில் பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளின் மதிப்பு 18 கோடி ருபாய் என்று போலீசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications