ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலையொட்டி டாஸ்மாக்கில் ரூ.35 கோடிக்கு மது விற்பனை
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலையொட்டி திருச்சியில் ரூ.35 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதிமுக அமைச்சர்கள் குழு ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டு இடைத்தேர்தல் வேலைகளை கவனித்தது. திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஸ்ரீரங்கத்திற்கு சென்று வாக்கு சேகரித்தனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேர்தலையொட்டி திருச்சியில் ரூ.35 கோடிக்கு மது விற்பனையானது தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதி முதல் 11ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட ரூ.6 கோடிக்கு கூடுதலாக மது விற்றுள்ளது. மேலும் இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீரங்கத்தில் வழக்கத்தை விட ரூ.4 கோடிக்கு கூடுதலாக மது விற்பனையாகியுள்ளது.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு மது, பிரியாணி, பணம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications