மழையையும் பொருட்படுத்தாமல் மதுவில் நீந்திய ‘குடி’மகன்கள்... தீபாவளி பண்டிகைக்கு ரூ. 372 கோடி விற்பனை
சென்னை: இந்தாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு டாஸ்மாக்கில் ரூ. 372 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது அரசின் இலக்கையும் தாண்டி குடித்துத் தீர்த்துள்ளது தமிழகம்.
தமிழகத்தில் பரவலாக தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டினாலும், சில இடங்களில் வழக்கத்தை விட இந்தாண்டு தீபாவளி சற்று அமைதியாகவே வந்து சென்றது. காரணம் மழை. தீபாவளிக்கு சில தினங்கள் முன்னரே தமிழகத்தில் கனமழை பெய்யத் தொடங்கி விட்டது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. பட்டாசு வெடிக்க இயலாத நிலை ஏற்பட்டது.
ஆனால், அடாது மழை பெய்தாலும் விடாது தங்களது கடமையை செவ்வணே செய்துள்ளார்கள் ‘குடி'மகன்கள். கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ. 68 கோடி அதிகமாக மது விற்பனையாகி இருப்பதே இதற்கு நல்ல சாட்சி.

டாஸ்மாக்...
தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரத்து 826 டாஸ்மாக் கடைகளும், 3 ஆயிரத்து 838 பார்களும் உள்ளன. சென்னையில் மட்டும் சுமார் 500 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

மது விற்பனை...
கடை ஒன்றிற்கு ரூ. 70 கோடி என தினமும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதுவே விடுமுறை நாட்களென்றால் நாளொன்றிற்கு ரூ. 92 கோடி என்ற அளவில் சராசரியாக மது விற்பனை நடைபெறுகிறது.

பண்டிகை நாட்களில் கூடுதல்...
பண்டிகை நாட்களென்றால் சொல்லவே வேண்டாம். குடிமகன்கள் குஷியாகி டாஸ்மாக்கிற்கு இன்னும் வருமானத்தை அதிகமாக்கி விடுவார்கள்.

விலை உயர்வு...
இந்நிலையில், சமீபத்தில் மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வு வரி உயர்த்தப்பட்டது. இதனால் மது விலை அதிகரித்தது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் விலை 12.5 சதவீதமும், உயர்ரக மதுபானங்கள் விலை 22.5 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டது. இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வரை வருவாய் அதிகரித்து கிடைத்து வருகிறது.

3 நாட்களில்...
இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.372 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இலக்கு...
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ.304 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகின. எனவே, இந்தாண்டு ரூ. 370 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

ரூ. 372 கோடி...
அதன்படி, கடந்த 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரூ.113 கோடியும், 9-ந் தேதி(திங்கட்கிழமை) ரூ.108 கோடியும், 10-ந் தேதி (தீபாவளி பண்டிகையன்று)ரூ.151 கோடியும் என மொத்தம் ரூ.372 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலக்கை தாண்டியது...
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.68 கோடி அதிக விற்பனை ஆகும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி வருமானம் ஈட்டித் தந்துள்ளனர். ‘குடி'மகன்கள்.

பிராந்திக்கே மவுசு...
வழக்கம்போல் இந்தாண்டும் பிராந்தி மதுவகைகளே அதிகம் விற்பனை ஆகியுள்ளது. மழை காரணமாக பீர் வகைகளுக்கு மவுசு குறைந்ததால், கடந்த ஆண்டை விட பீர் விற்பனை 10 சதவீதம் சரிவடைந்துள்ளது.

எலைட்டிலும் கூட்டம்...
‘டாஸ்மாக்' மது கடைகளை போலவே ‘எலைட்', தனியார் மதுபான பார்களிலும் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications