5 நாளில் வெள்ளப் பாதிப்பு கணக்கெடுக்கும் பணி முடியும்... மாடியில் வசித்தாலும் ரூ. 5000 உண்டு!
சென்னை: சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளைக் கணக்கெடுக்கும் பணி 5 நாட்களில் முடிந்து விடும் என்றும், அப்பகுதிகளில் மாடியில் வசிப்போருக்கும் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கணக்கெடுக்கும் பணிகளைக் கண்காணிக்கும் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் பாதிப்படைந்த வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மாடிகளில் வசிப்போருக்கும் நிவாரண நிதி கிடைக்குமா என்பதில் குழப்பம் நீடித்தது.
இது தொடர்பாக கணக்கெடுக்கும் பணிகளைக் கண்காணிக்கும் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வீடு வீடாகச் சென்று...
"மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக 13 கேள்விகள் அடங்கிய விண்ணப்ப படி வத்தை வீடுவீடாக கொண்டு சென்று கணக்கெடுத்து அதில் உரிமையாளரிடம் கையெழுத்து வாங்கி வருகிறோம்.

கேள்விகள்...
அந்த விண்ணப்ப படிவத்தில் குடும்ப தலைவர் பெயர், முகவரி, செல்போன் நம்பர், குடும்ப அட்டை எண் அல்லது நியாய விலை கடை யின் பெயர், வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், குடியிருக்கும் வீடு கட்டிடமா? அல்லது குடிசையா? மழையால் வீடு முழுவதும் பாதிக்கப்பட்டதா? பகுதியாக பாதிக்கப்பட்டதா? மழை வெள்ளத்தால் வீடு சூழப்பட்டதா? ஆகிய கேள்விகள் விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளது.

ஆவணங்கள்...
பாதிக்கப்பட்டவருக்கு ரேஷன் கார்டு இல்லை என்றால் டிரைவிங் லைசென்சு, ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஆவணங்கள் இருந்தால் அதை குறிப் பிடலாம்.

மீண்டும் கணக்கெடுப்பு...
கணக்கெடுக்கும் போது சில வீடுகள் பூட்டி கிடந்தால் பக்கத்து வீட்டில் அவரது செல்போன் எண் அல்லது பெயரை கேட்டு தெரிந்து மீண்டும் சர்வே செய்ய விண்ணப்பத்தில் குறிப்பிட்டு மீண்டும் அந்த வீடுகள் கணக்கெடுக்கப்படும். எனவே யாரும் இதில் விடுபட மாட்டார்கள்.

மாடியில் வசிப்போருக்கும்...
வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் மாடியில் வசித்தாலும் அவர்களுக்கும் ரூ. 5 ஆயிரம், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி - சேலை உண்டு. ஏனென்றால் அவர்களும் வெளியே வர முடியாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட் டவர்கள் தான்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பட்டியல்...
மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலை அடிப்படையாக வைத்து வார்டு தெருக்கள் வாரியாக ஒவ்வொரு வீட்டு பட்டியலும் எங்களிடம் உள்ளது. அதை கணக்கெடுக்க செல்லும் ஊழியர்களுக்கு கொடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகிறோம்.

களத்தில் ஊழியர்கள்...
சென்னையில் 10 பேர் கொண்ட குழுக்களாக மினி வேனில் ஒவ்வொரு தெருவுக்கும் சென்று 10 ஊழியர்கள் கணக்கெடுப்பார்கள். இந்த பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இப்போது கூடுதலாக ஊழியர்கள் சேர்க்கப்பட்டு 3250 பேர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

5 தினங்களில்...
சென்னையில் உள்ள சுமார் 11 லட்சம் வீடுகளில் 2 லட்சத்து 65 ஆயிரம் வீடுகளில் கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது. இன்னும் 5 அல்லது 6 நாளில் கணக்கெடுக்கும் பணி முடிந்து விடும் என எதிர்பார்க்கிறோம்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications