ரூ.570 கோடியுடன் கோவை கிளம்பின கன்டெய்னர் லாரிகள்! கட்டுப்பாட்டில் எடுத்த வருமான வரித்துறை
திருப்பூர்: ரூ.570 கோடி பணத்துடன் பிடிபட்ட 3 கன்டெய்னர் லாரிகளும், திருப்பூரிலிருந்து, கோவைக்கு கிளம்பியுள்ளன. வருமான வரித்துறை புலனாய்வு பிரிவின் கட்டுப்பாட்டில் அந்த பணம் உள்ளது.
கோவையிலிருந்து, ரூ.570 கோடி பணத்தோடு, விசாகபட்டிணம் நோக்கி சென்ற 3 கன்டெய்னர் லாரிகள், திருப்பூர் அருகே கடந்த சனிக்கிழமை மடக்கிப் பிடிக்கப்பட்டன.

தக்க ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட இந்த பணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில், சுமார் 18 மணி நேரம் கழித்து, எஸ்.பி.ஐ வங்கி அப்பணம் தங்களுக்கு உரியது என்று கூறியது.
இந்த பணம், குறித்து சந்தேகம் இருப்பதாக கருணாநிதியும், அந்த பணம், கோடநாட்டில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டது என்று வைகோவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுபோன்ற சர்ச்சைகளை தொடர்ந்து, 3 லாரிகளையும், அதிலுள்ள பணத்தையும், வருமான வரித்துறை புலனாய்வு பிரிவின் கட்டுப்பாட்டில் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
இன்று மாலை லாரிகள், பணத்தோடு கோவை புறப்பட்டன. கோவையில் வைத்து வருமான வரித்துறை, அந்த பணம் மற்றும் ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்து அவை சரியானதுதானா என்பதை சோதித்து பார்க்கும். "இந்த சோதனையின் முடிவில் திருப்தி ஏற்பட்டால்தான் பணம் திருப்பி வழங்கப்படும்" என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications