கோவையில் மூட்டை மூட்டையாக குட்கா.. ரூ.8.5 லட்சம் மதிப்பிலான 750 கிலோ குட்காபறிமுதல்
ரூ.8.5 லட்சம் மதிப்பிலான 750 கிலோ குட்காபறிமுதல் செய்யப்பட்டது.
Recommended Video

கோவை: கோவை தாமஸ் வீதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் ரூ.8.5 லட்சம் மதிப்பிலான 750 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை டவுன்ஹால் தாமஸ் வீதியில் ஒரு வீட்டில் மூட்டை மூட்டையாக பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயா லலிதாம்பிகா தலைமையிலான குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

வீட்டை குடோனாக மாற்றி செயல்பட்ட வந்த அந்த கட்டிடத்தின் இறுதி அறைகளில் சுமார் ரூ.8.5 லட்சம் மதிப்பிலான 20 மூட்டைகளிலான ஹான்ஸ், பான் பாக்கு, குட்கா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. நேசராஜ் என்ற கட்டிட உரிமையாளரை பிடித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாசனை வராதவாறு ஊதுபர்த்தியுடன் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
கோவை சூலூர் பகுதியில் குட்கா ஆலை கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் இதே தாமஸ் வீதி, ராஜவீதி, தர்மராஜா கோயில் வீதி மற்றும் காந்திபார்க் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுமார் 2 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications