ஏற்காடு இடைத் தேர்தல்: 7,000 விவசாயிகள் ‘நோட்டா’வைப் பயன்படுத்த முடிவு
சேலம்: ஏற்காடு இடைத்தேர்தலில் நோட்டா ஓட்டினைப் பயன்படுத்த 7000 விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு கடந்த பத்து ஆண்டுகளாக நாடு முழுவதும், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டது. அப்பணிக்காக நிலம் கொடுக்கும் பொதுமக்களுக்குரிய இழப்பீட்டை, அந்தந்த மாநில அரசு சரிபார்த்து வழங்க வேண்டும் என தெரிவித்தது.
என்.ஹெச்.68 என்றழைக்கப்படும், சேலம் - உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலைப்பணி, 136 கி.மீ., தூரம் நடந்ததுள்ளது. இதற்காக, விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என, 5,000க்கும் மேற்பட்டோரிடம், நிலம், வீடுகளை மத்திய அரசு சுவாதீனம் செய்தது. அதற்கான உரிய இழப்பீட்டை வழங்காமல் இழுத்தடித்ததால், நிலத்தை கொடுத்தோர் அரசு மீது அதிருப்திக்குள்ளாகினர்.
இது தொடர்பாக, உயர்நீதிமன்றத்திலும் அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நெடுஞ்சாலை என்.ஹெச்.68ல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலச்சங்கத்தினர், தங்களுக்குரிய இழப்பீடை கேட்டு போராடி வருகின்றனர். இதில், ஏற்காடு தொகுதிக்கு உட்பட்டு, 1,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
தமிழக முதல்வர், தேசிய நெடுஞ்சாலை பணிக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தேர்தலில் ஓட்டு போடாமல் புறக்கணிப்போம் என செவ்வாய்கிழமையன்று, வாழப்பாடி பகுதியில், வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகித்தனர். தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீஸார், அவர்களை கைது செய்து, வாழப்பாடியார் திருமண மண்டபத் தில் தங்க வைத்தனர்.
தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், முதல்வரிடம் நாங்கள் எங்களுடைய கோரிக்கையை கூற வேண்டும். அதற்கு எங்களுக்கு அனுமதி பெற்றுத்தரவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
அவர்களிடம் பேசிய போலீசார், அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியிடம் முறையிடுங்கள், அவர் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பார் என, போலீஸ் அதிகாரிகள் கூறினர். செவ்வாய்கிழமை மாலை, 4 மணியளவில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி வீட்டுக்கு, சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் பழனிசாமி, பொருளாளர் சின்னதுரை உள்ளிட்ட, பத்து நிர்வாகிகள் வந்தனர். இரண்டு மணி நேர தாமதத்துக்கு பின், அவர்களை அமைச்சர் சந்தித்து பேசினார்.
அப்போது, நான் தேர்தல் பணியில் இருக்கிறேன். எனக்கு இந்த பிரச்னை பற்றி தெரியாது, முதல்வரை சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கி கொடுப்பது, அமைச்சர் பன்னீர்செல்வம் தான், அவர் வெள்ளாளகுண்டம் பகுதியில் உள்ளார், அவரைச் சென்று பாருங்கள் என, கூறியுள்ளார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நிலம் கொடுத்தோர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: அமைச்சரிடம் வந்தால், எங்களுடைய கோரிக்கையையும், முதல்வரை சந்திக்கவும் வாய்ப்பு கிடைக்கும். தேர்தலில் ஆதரவு கொடுக்கலாம் என, நினைத்தோம்.
ஆனால், எனக்கு தெரியாது, பன்னீர்செல்வத்தை போய் பாருங்கள் என, கூறுகிறார். எங்களிடம், 7,000 ஓட்டு உள்ளது, அவற்றை நாங்கள் புறக்கணிப்போம் என, கூறியபோது அது உங்கள் இஷ்டம் என, கூறினார்.
நிலத்தை கொடுத்து விட்டு, இழப்பீடை பெற முடியாமல் தவிக்கிறோம். பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 7,000 ஓட்டு, எங்கள் வசம் உள்ளது, நடக்க உள்ள ஏற்காடு தேர்தலை நாங்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் 10,267 பேர் 49ஓ வை பயன்படுத்தியிருந்தனர்.
ஏற்காடு இடைத்தேர்தலில் ஏராளமானோர் நோட்டா ஓட்டினைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதால் அதிமுக, திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications