எங்களுக்குத்தான் விடுப்பே இல்லையே.. போலீசார் மத்தியில் பரவும் வாட்ஸ் அப் தகவல்!
சென்னை: தமிழக போலீசார் குறித்தும் அவர்களது விடுப்பு குறித்தும் ஒரு தகவல் போலீசார் மத்தியில் பரவி வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்டுள்ள காவலர்களின் விடுப்புகளை உடனடியாக ரத்து செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக போலீசார் குறித்தும் அவர்களது விடுப்பு குறித்தும் ஒரு தகவல் போலீசார் மத்தியில் பரவி வருகிறது.
அந்த தகவல்:
ஜனவரி மாதம் பொங்கல் பாதுகாப்பு பணி இருக்கு யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
பிப்ரவரி மாதம் வருடாந்திர கவாத்து பயிற்சி இருக்கு யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
மார்ச் மாதம் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
ஏப்ரல் மே மாதம் தேர்தல் நடைபெறுவதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
ஜுன் மாதம் கோடை விடுமுறைக்கு பின்பு நீதிமன்றம் நடைபெறுவதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
ஜுலை மீண்டும் சட்ட சபை கூட்டத் தொடர் நடைபெறுவதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணி இருப்பதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
செப்டம்பர் மாதம் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்பு பணி இருப்பதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
அக்டோபர் மாதம் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணி இருப்பதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிப்பு தின பாதுகாப்பு பணி இருப்பதால் யாரும் விடுப்பு கேட்க வேண்டாம்
கொடுப்பது 12 நாள் தற்செயல் விடுப்பு அதையும் 12 மாதத்திலும் விடுப்பு கேட்க கூடாது என்ற இந்த மட்டற்ற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு ஒரு தகவல் போலீசார் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications