பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க செல்கையில் விபத்து: 2 மகள்களையும் பறிகொடுத்த எஸ்.ஐ.
கோவை: கோவையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க சென்ற வழியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அக்காவும், தங்கையும் பலியாகியுள்ளனர்.
கோவை கே.ஜி. சாவடியில் உள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(51). அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

அவரது மகள்கள் இந்து ப்ரியா(21), பூஜா(19). இந்து தனியார் பொறியியல் கல்லூரியிலும், பூஜா தனியார் ஆயுர்வேத கல்லூரியிலும் படித்து வந்தனர். இந்துவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்துள்ளது. பணியில் சேர அவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தார்.
இந்நிலையில் திங்கட்கிழமை காலை ஜெயப்பிரகாஷ் தனது இரண்டு மகள்களையும் தனது மொபட்டில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். மதுக்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே செல்கையில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார் ஜெயப்பிரகாஷ்.
முந்த முயன்றபோது மொபட் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் இந்து மற்றும் பூஜா சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயம் அடைந்த ஜெயப்பிரகாஷை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான மதுக்கரையை சேர்ந்த வேலுச்சாமியை (51) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க செல்லும் வழியில் சகோதரிகள் பரிதாபமாக பலியானது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications