ஏன் முதல் கல்யாண முறிவுக்கே பெரியார்தான் காரணம்னு உளறுங்களேன்.. முட்டாள் நாத்திகம்.. எஸ் வி சேகர்
சென்னை: ஏன் முதல் கல்யாண முறிவுக்கே பெரியார்தான் காரணம்னு உளறியிருக்கலாமே என எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்.
துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் கலந்து கொண்ட 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற சேலம் பேரணி குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது திராவிடர் கழகத்தினரையும் பெரியாரிஸ்டுகளையும் கோபமடைய செய்தது.
அவரை கண்டித்து போராட்டங்களை நடத்தினர். பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ரஜினிகாந்துக்கு எதிராக ஒரு புள்ளியில் நின்றனர்.

பொறுமை
பெரியார் குறித்து ரஜினி பேசியதை கண்டித்த அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நடந்த ஒரு விழாவில் பேசுகையில் ரஜினி தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்டதற்கு பெரியார் கொள்கைதான் காரணம் என்பதை அவர் மறக்கக் கூடாது. எப்போதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள்.

மன்னிப்பு கேட்க மறுப்பு
50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி குறித்து பேச அவசியம் என்ன என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். பெரும்பாலானோரின் கேள்வியும் இதுவாகத்தான் இருந்தது. போராட்டம் சூடு பிடித்துள்ள நிலையிலும் தான் கூறியது சரியே என்றும் இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் ரஜினி காந்த் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

அக்னி சாட்சி
இந்த நிலையில் பாஜக நிர்வாகி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் ராமசாமி நாயக்கரால் தான் இரண்டாவது திருமணம் நடக்கிறதா? அப்படி என்றால் அந்த திருமணங்களில் மந்திரம் சொல்லி, அக்னி சாட்சியாக நடப்பது சோ. ராமசாமி அவர்களால் என்று நான் சொல்கிறேன் என்றார்.
Recommended Video
|
அநாகரிகம்
இதை ரீட்வீட் செய்துள்ளார் எஸ் வி சேகர் அவர் தனது பதிவில் கூறுகையில் பல முதல் கல்யாண முறிவுக்கே அவர்தான் காரணும்னு உளறியிருக்கலாமே. சொம்பு தூக்க ஒரு அளவில்லையா? அடுத்தவங்க தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது கூட அநாகரிகம் என்று தெரியாத முட்டாள் நாத்திகம் என கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக இருந்து வரும் நிலையில் எஸ் வி சேகரின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications