சென்னை வந்தார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்... இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் சந்திப்பு
சென்னை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை நேற்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
சென்னையில் எம்.ஆர்.எப். பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சச்சின் நேற்று சென்னை வந்தார். பின்னர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அவரது இல்லத்திற்கு சென்று சச்சின் சந்தித்தார். அப்போது ஏ.ஆர். ரஹ்மானின் தாயாரும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின் போது ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கும் விதம் குறித்து, சச்சின் நேரில் கண்டு ரசித்தார். சச்சினுக்கு சில ட்யூன்களை ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து காண்பித்தார். சந்திப்பு முடிந்ததும், பேசிய சச்சின், தான் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகர் என்றும், மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தாகவும் கூறினார்.
முன்னதாக எம்.ஆர்.எஃப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் வீரர்களை சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார். அப்போது வீரர்களுக்கு அவர் பல்வேறு நுணுக்கங்கள் குறித்து விளக்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது...

27 ஆண்டுகளாக வேகப்பந்து பயிற்சி அளிப்பதற்கு சரியான திட்டமிடல், தொலைநோக்கு பார்வை மட்டுமல்லாமல் முழு ஈடுபாடும் அவசியம்.
அதுதவிர சரியான நபர்களை கண்டறிந்து பயிற்சியளிப்பதும் முக்கியம். அந்த வகையில் டென்னிஸ் லில்லியை நிர்வாகம் கண்டறிந்தது. தற்போது கிளென் மெக்ராத் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இதுவரை நான் விளையாடிய அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் ஏதாவது ஒரு வகையில் எம்.ஆர்.எஃப். பயிற்சி மையத்துடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள் என்று கூறினார். அப்போது சச்சினுடன் கிளென் மெக்ராத்தும் உடன் இருந்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications