ஒன்றுபட்டால் இந்துக்களுக்கு எதிரியே இல்லை... ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு!
இந்துக்கள் ஒன்றுபட்டால் இந்துக்களுக்கு எதிரியே இல்லை என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ராஜபாளையம்: இந்துக்கள் ஒன்றுபட்டால் இந்துக்களுக்கு எதிரியே இல்லை என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராம ராஜ்ய ரதயாத்திரைக்கு தமிழக எல்லையான திருநெல்வேலியில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. விடுதலை சிறுத்தைகள், இஸ்லாமிய அமைப்புகள், திராவிடர் கட்சிகள் சாலை மறியல், போராட்டங்கள் நடைபெற்றன.

எனினும் பல்வேறு எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் மீறி தமிழகத்தில் ரத யாத்திரை போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ரத யாத்திரை ராஜபாளையம் வருவதையொட்டி ரதயாத்திரையை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த வரவேற்பு கூட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் இந்துக்கள் ஒன்றுபட்டால் இந்துக்களை எதிர்க்க யாராலும் முடியாது என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications