'உயிரோடு இருக்க முடியாது...': கிரானைட் முறைகேட்டை விசாரிக்கும் சகாயத்துக்கு கொலை மிரட்டல்!
மதுரை: கிரானைட் குவாரியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயத்துக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 86 கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சென்னை ஹைகோர்ட்டு உத்தரவின்பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மதுரையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 3ம் தேதி முதல் சகாயம் கிரானைட் முறைகேடுகள் குறித்து பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகிறார். இதுவரை 200க்கும் மேற்பட்ட மனுக்கள் சகாயத்திடம் கொடுக்கப்பட்டுள்ளன. கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நிலங்களை இழந்த பொதுமக்கள், வீட்டுமனைகளை பறிகொடுத்த போலீசார் உள்ளிட்டோர் தங்களுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 2ம் கட்ட விசாரணையை மதுரையில் நேற்று சகாயம் தொடங்கினார். நேற்றும் ஏராளமானோர் புகார் மனு அளித்தனர். நாளை முதல் கிரானைட் குவாரிகளில் நேரடி விசாரணையில் ஈடுபட உள்ளார் சகாயம்.
இந்நிலையில் நேற்று இரவு சகாயத்திற்கு கொலைமிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை எழுதியவர் ஈரோடு குமார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக்கடிதத்தில், ‘'கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இனி விசாரணை நடத்தக்கூடாது. மீறி ஏதாவது செய்தால் உயிருடன் இருக்க முடியாது'' என்று குறிப்பிடப்பட்டிந்தது. இக்கடிதத்தை மதுரை போலீஸ் கமிஷன சஞ்சய் மாத்தூரின் பார்வைக்கு அனுப்பிவைத்தார். அவர் அதைப்பார்த்துவிட்டு, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளர். மேலும் சகாயத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார்.
சகாயம் தனது விசாரணையை ஆரம்பித்த பிறகு அவ்வப்போது இதுபோன்ற மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications