கிரானைட் முறைகேடு: சகாயம் அலுவலகத்தில் திரும்பியிருந்த கண்காணிப்பு கேமரா.. திருப்பியது யார்?
மதுரை: மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் தன்னுடைய கிடுக்கிப்பிடி விசாரணையை சகாயம் துவங்கியுள்ள நிலையில் அவருடைய தனி அலுவலகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவை யாரோ ஒருவர் திருப்பி வைத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு மனு, விசாரணைக்கு முட்டுக்கட்டை போன்ற பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி நீதிமன்ற உத்தரவின் பேரில் கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையைத் துவங்கி உள்ளார் சிறப்பு விசாரணை அதிகாரியான சகாயம் ஐ.ஏ.எஸ்.

மதுரை வந்துள்ள சகாயம், தனது குழுவினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். விசாரணையை நடத்துவது குறித்து அவர்களுடன் விவாதித்தார். இந்த நிலையில் சகாயத்தின் அலுவலகத்தில் நடந்த ஒரு விஷயம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பூமாலை வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சகாயத்தின் கிரானைட் முறைகேடு விசாரணை அலுவலகத்தில் வருபவர்களையும், அதிகாரிகள் விசாரணையையும் கண்காணிக்க கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த அதிகாரிகளில் யாரோ ஒருவர் நேற்று அக்கேமராவின் பார்வையினை வேறு பக்கமாக திருப்பி விட்டிருக்கின்றார். இச்சம்பவம் விசாரணை அதிகாரிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கேமராவை வேறு பக்கமாக திருப்பி விட்ட அந்த அதிகாரி யார் என்ற சலசலப்பு எழுந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications