நிலாவில் பாபா முகம்.. சென்னை நகர வீதிகளில் கூடிய மக்கள்!
சென்னை நகரில் பாபா முகம் நிலாவில் தெரிவதாக பரபரப்பு செய்தி பரவியது.
சென்னை: நிலாவில் பாபா முகம் தெரிவதாக வந்த செய்தியால் சென்னையே நேற்றிரவு பரபரப்பாகி போனது.
நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாகவும், அதில் பாபா நம்மை பார்க்கிறார் எனவும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனால் சென்னை நகர பகுதி மக்கள் அனைவரும் ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

கையில் டெலஸ்கோப்
இந்த தகவலுடன் அது நம்பக்கூடிய வகையில் நிலவில் பாபா முகம் போன்ற உருவ புகைப்படமும் கூடவே பரவியது. அதனால் 9 மணி அளவில் இப்பகுதி மக்கள் அனைவரும் வீட்டை வெளியே வந்தனர். பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர்
பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் நிலாவை பார்த்தனர்.

ஆமாம்... பாபா தெரிகிறார்
அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" என கூறி பரவசப்பட்டனர். ஒருசிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்துவிட்டனர். தங்கள் மனசுக்கு பிடிச்ச கடவுளை மனதில் நினைத்து கொண்டு பார்த்தால் அவர்களது முகம் நிலாவில் இருப்பது போல் தோன்றும் என்று இதற்கு சிலர் விளக்கமும் கொடுத்தனர்.

பாட்டி வடை சுடவில்லை
கடந்த 2014-நாசா நிலவிலிருந்து ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. அதில் ஒரு உருவத்தின் நிழல் நடமாடியது தெரியவந்தது. ஆனால் அது யார் என்றுதான் இதுவரை தெரியவில்லை. ஆனால் பாட்டி வடையை எப்போதுமே சுடவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இதைவிர
நிலாவில் உண்மையில் நிலாவில் யார்தான் இருக்கிறார்கள் என்று இப்போதுவரை தெரியவில்லை.

நிலாவுக்கே வெளிச்சம்
நேற்றிரவு நிலாவில் சாய்பாபா தெரிகிற சம்பவம் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. சென்னை நகர வீதிகளில் கூடிய மக்களால் அதுவரை பரபரப்பும் நீடித்தது. சென்னை மட்டுமில்லை, தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் இந்த தகவல் பரவியது. அதற்கு பின்னர் நிலா மேகத்துக்குள் ஓடி மறைந்துவிட்டது. உண்மையிலேயே நிலாவில் பாபா முகம் தெரிந்ததா? தெரியவில்லையா? அந்த "நிலாவுக்கே வெளிச்சம்"!
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications