'சலாம் டூ கலாம்'... அப்துல் கலாமின் புகழ் பாடும் வீடியோ இசை ஆல்பம்
மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள் அக்டோபர் 15. அதையட்டி சென்னை குன்றத்தூரில் உள்ள ‘லிட்டில் ஃப்ளவர் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளிக்கூட'மும், ‘சாதகப் பறவைகள்' இசைக் குழுவும் இணைந்து ‘சலாம் டூ கலாம் & கலாமிற்கு ஒரு காணிக்கை' (Salam 2 Kalam - A Tribute to Kalam) என்ற பெயரில் ஒரு இசை வீடியோ ஆல்பத்தை வெளியிட்டிருக்கின்றனர். இந்த வீடியோ ஆல்பத்திற்கு ‘சாதகப் பறவைகள்' இசைக்குழு இசையமைத்திருக்கிறது. அந்த பள்ளிக்கூட மாணவ - மாணவிகள் நடனமாடியிருக்கின்றனர்.

அப்துல் கலாம் பிறந்த நாளை ‘மாணவர்கள் தினம்' என்று இந்திய அரசாங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட வேண்டுமென்று இவர்கள் மத்திய அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதற்காக 31,00,000 பேரிடம் கையெழுத்து வாங்கி இருக்கின்றனர். இந்த வேலை கடந்த 5 வருடங்களாக நடைபெற்று இருக்கிறது.

‘சாதகப் பறவைகள்' சங்கர் இசையமைத்திருக்கும் இந்த இசை வீடியோ ஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் பாடலை கவிஞர் பரிணாமன் எழுத, அஜய், கவிதா, யோகிதா ஆகியோர் பாடியிருக்கின்றனர். ஒளிப்பதிவு:முருகசரவணன். இயக்கம்:ராம். ‘லிட்டில் ஃப்ளவர் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல்' பிரின்ஸிபால் ஜான் சேவியர் தங்கராஜ். இந்த இசை வீடியோ ஆல்பத்தை தயாரித்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications