பசுமை வழிச் சாலையை கைவிடாவிட்டால்.. முதல்வர் வீடு முன்பு தற்கொலை.. கிராம மக்கள் அதிரடி!
பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சேலம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,.
சேலம்: விவசாய நிலங்களை அழிக்கும் திட்டமான பசுமை வழிச்சாலை திட்டத்தினை கைவிடாவிட்டால் தமிழக முதல்வர் வீடு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம் என பூலாவரி கிராம மக்கள் பகீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மாவட்டத்தின் 'கனிம வளங்களை கொள்ளையடிக்கவே, பசுமை சாலை திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதை செயல்படுத்தினால், அடுத்த தலைமுறையினர், விவசாயம் செய்ய வழியின்றி பாதிக்கப்படுவர் என்றும் மாவட்டத்தின் பல கிராம மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தினால் நீராதாரமும் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பலமுறை பலவடிவங்களில் தங்களுடைய போராட்டங்களை அவர்கள் தொடர்ந்து நடத்தி கொண்டு வருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு பசுமை வழிச்சாலை திட்டத்தினை அமைப்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களின் பலகட்ட போராட்டங்களுக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என்று குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சேலம் பூலாவரி கிராம மக்கள் அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும்போது, பச்சைபசேல் என்ற மரங்களும், சோலைகளும் நிறைந்துள்ள பகுதிகளை அழித்துவிட்டு இந்த பசுமைவழிச்சாலையை கொண்டுவர அரசு ஏன் துடிக்கிறது என தெரியவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் எந்த பயனும் கிடையாது என்றும் காலம் காலமாக இருக்கும் தங்களுடைய நிலத்தை, சொற்ப விலைக்கு அரசுக்கு என்றுமே தரமாட்டோம் என்றும் பூலாவரி கிராம மக்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர். ஆனால் அதையும் மீறி தங்களது நிலம் கைப்பற்றப்படுமானால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை என்றும் அவர்கள் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications