பரபரப்பு கடிதம்... எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே சேலம் கண்ணனை விடாது துரத்திய கருணாநிதி..

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அதிமுகவின் முன்னாள் எம்பி சேலம் கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்தார்".. இது இன்றைய இளம் தலைமுறைக்கு செய்திதான்...ஆனால் 30 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல் களத்தில் "சேலம் கண்ணன்" என்ற பெயர் ஏற்படுத்திய பரபரப்பு இந்த 2016-ம் ஆண்டிலும் நீடிக்கிறது. அதுவும் திமுக தலைவர் கருணாநிதி இன்றும் கூட சேலம் கண்ணன் பெயரை உச்சரிக்காமல் அதிமுக குறித்தோ ஜெயலலிதா பற்றியோ விமர்சிக்கமாட்டார் என்றால் அவரது தாக்கம் அப்படியானது!

1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.. அப்போது மக்கள் குரல் நாளேட்டில் ஒரு கடிதம் வெளியாகிறது... அது அதிமுகவில் தலையெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, பிரதமராக இருந்த ராஜிவ்காந்திக்கு தம்மை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று எழுதியதாக சொல்லப்படும் கடிதம்.

Salem Kannan and Karunandhi

இந்த கடிதத்தை அப்போது எம்.பி.யாக இருந்த சேலம் கண்ணன் மூலம் ராஜிவ்காந்திக்கு ஜெயலலிதா கொடுத்தனுப்பினார் என்ற செய்தி அப்போது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

அந்தக் கடிதத்தின் வரிகளைத்தான் இன்றளவும் திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு எதிரான ஆயுதமாக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் கூட கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் இக்கடிதம் பற்றி விவரித்திருக்கிறார்.

கடந்த ஜனவரி 19 கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

சேலம் கண்ணன் மூலம் ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா கொடுத்தனுப்பிய கடிதம் குறித்த கருணாநிதியின் ஜனவரி 19-ந் தேதி அறிக்கை:

கேள்வி: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை யொட்டி விடுத்துள்ள அறிக்கையில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை நாம் ஒவ்வொருவரும் உயிராக மதிக்கிறோம்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறாரே?

பதில்: திருவரங்கம் தொகுதியில் அடுத்த மாதம் இடைத் தேர்தல் வருகிறதல்லவா? எம்.ஜி.ஆருக்குப் பிறந்த நாள் வாழ்த்தும் கூறுவார், பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வாழ்த்தும் கூறுவார்.

ஆனால் இதற்கு சில நாட்களுக்கு முன்பு வந்த ஆங்கிலப் புத்தாண்டுக்கும், அதற்கு முன்பு வந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கும் வாழ்த்துக் கூறவில்லையே, ஏன்?.

எம்.ஜி.ஆருக்கு தற்போது புகழ் மாலை சூடும் ஜெயலலிதா, அவர் உயிரோடு இருந்தபோது, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு சேலம் கண்ணன் மூலமாக ஒரு கடிதம் அனுப்பியது தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்து விட்டதா என்ன?

ஜெயலலிதா அப்போது தன் கைப்பட எழுதிய அந்தக் கடிதம் "மக்கள் குரல்" ஏட்டிலேயே அப்போது "பிளாக்" செய்து வெளியிடப்பட்டிருந்ததே?

"The root cause of everything that is happening here is that the C.M. is terribly jealous of my popularity. He cannot stomach the fact that I have become so popular. So he is doing everything possible to eliminate me from the political scene and from public life.

அதாவது, "மிகுந்த செல்வாக்குடன் நான் (ஜெயலலிதா) பிரபலம் அடைந்திருப்பதை பார்த்து முதலமைச்சர் (எம்.ஜி.ஆர்) மிகவும் பொறாமைப்படுகிறார். இதுதான் இங்கு நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கும் மூல காரணம். நான் மிகவும் பிரபலம் அடைந்துள்ளதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

எனவே, அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்தும் என்னை ஒழித்துக் கட்ட தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் (எம்.ஜி.ஆர்) செய்து வருகிறார்"

என்று எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதினார்.

அது மாத்திரமல்ல; அதே கடிதத்தில்,

"MGR himself, who does not want to give me due importance, does not want to induct me into the Cabinet. No one here can really dare to oppose him for without him they are Zeros."

(எனக்கு உரிய முக்கியத்துவம் தர விரும்பாத எம்.ஜி.ஆர்., என்னை அமைச்சரவையில் சேர்க்கவும் விரும்பவில்லை. அவரை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியமில்லை. ஏனென்றால் அவரில்லாவிட்டால் மற்றவர்கள் எல்லாம் பூஜ்யங்கள்) என்றெல்லாம் எழுதியவர், இன்றைக்கு தானே முன் வந்து சென்னை விமான நிலையத்திற்கு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று கேட்க முன் வந்திருப்பது கண்டு, பாசத்தாலா அல்லது பதவி ஆசையினாலா எனத் தமிழ் மக்கள் சந்தேகிப்பது இயல்பானதுதானே?

சூது, வாது, வஞ்சகம் மேலும் 1.1.1989 'மக்கள் குரல்' இதழில், ஜெயலலிதாவைப் பற்றி, எம்.ஜி.ஆர். கூறும்போது, "அம்முவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எதையோ நினைத்து அம்முவை அரசியலில் ஈடுபடுத்தினேன். பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்துவிட்டது. சூதும், வாதும், வஞ்சகமும், சூழ்ச்சியும் கற்ற இந்த அம்மு எனக்கே உலை வைக்கிறாள். சும்மா ஓடுகிற ஓணானை முகத்திலே நுழைய விட்ட கதையாக என் விஷயம் ஆகிவிட்டது இப்போது. இந்த அம்மு அபாயகரமானவள். யாரையும் அவள் தனக்காகப் பயன்படுத்துவாள். எதையும் செய்யத் தயங்கமாட்டாள். மிகவும் கெட்டவள்"" என்று சொன்ன கருத்தை "மக்கள் குரல்" ஆசிரியர் டி.ஆர்.ராமசாமி அவரது பத்திரிகையில் அப்போதே வெளியிட்டிருந்தார்.

ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று கருதிக்கொண்டு, தற்போது ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்குக் காகிதப் புகழ் மாலை சூட்டிப் பாசாங்கு காட்டியிருக்கிறார். இவ்வாறு தமது அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+