சேலம் மகளிர் சிறையில் உள்ள வளர்மதி மேலும் ஒரு வழக்கில் கைது... உத்தரவை வழங்கிய சென்னை போலீஸ்

சேலம் மகளிர் சிறையில் உள்ள வளர்மதி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சேலம் சிறையில் உள்ள வளர்மதி மேலும் ஒரு வழக்கில் கைது- வீடியோ

    சேலம்: சேலம் மகளிர் சிறையில் உள்ள வளர்மதி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    சேலம்- சென்னை இடையே 8 வழிச்சாலை உருவாக்கப்படவுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இதை கண்டித்து விவசாயிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த வாரம் சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வளர்மதி, மன்சூர் அலிகான் ஆகியோர் போராட்டம் நடத்தினர். அப்போது இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    படவிழாவில்

    படவிழாவில்

    இதில் வளர்மதி சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மேலும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இயக்குநர் அமீரின் "அச்சமில்லை" என்ற பட விழாவில் வளர்மதி கலந்து கொண்டார்.

    மகளிர் சிறையில் சென்னை போலீஸ்

    மகளிர் சிறையில் சென்னை போலீஸ்

    அப்போது மாநில அரசுக்கு எதிராக அவர் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து புகாரின் பேரில் கைது ஆணையை எடுத்து கொண்டு சேலம் மகளிர் சிறைக்கு சென்னை போலீஸார் விரைந்தனர்.

    ஆஜர் செய்ய முடிவு

    ஆஜர் செய்ய முடிவு

    அங்கு வளர்மதியை சந்தித்து கைது உத்தரவை கொடுத்தனர். இதையடுத்து அவரை சென்னை கொண்டு வந்து 28-ஆம் தேதி ஆஜர் செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

    உயர்நீதிமன்றத்தால் விடுவிப்பு

    உயர்நீதிமன்றத்தால் விடுவிப்பு

    வளர்மதி கடந்த ஆண்டு நெடுவாசல் திட்டத்தை எதிர்த்து பேருந்துகளில் துண்டு பிரசாரம் விநியோகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+