க்வேக்கர் ஓட்ஸ் பாக்கெட்டில் நெளிந்த புழுக்கள்... உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் பெண் புகார்
சேலம் : பிரபல பல்பொருள் அங்காடியில் வாங்கிய குவேக்கர் ஓட்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் நெளிந்ததையடுத்து அதனை வாங்கிய பெண் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
பால் பொருட்களில் புழு, பிஸ்கட் பாக்கெட்டில் பல்லி என அவ்வப்போது அதிர்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது க்வேக்கர் ஓட்ஸ் பாக்கெட்டில் புழு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

சேலம் பட்டை கோவில் பகுதியை சேர்ந்த சங்கீதா, அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் குவேக்கர் ஓட்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர், அந்த பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது, ஓட்ஸில் ஏராளமான புழுக்கள் நெளிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடந்த ஜூன் மாதம் தயாரிப்பு தேதி இடப்பட்டிருந்த அந்த பாக்கெட்டில் புழு இருந்தது பற்றி கடைக்காரரிடம் தெரிவித்தபோது முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடம் சங்கீதா புகார் அளித்தார். ஓட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அந்த புகாரில் வலியுறுத்தியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications