கமிஷன் விசாரணை முடிந்த பிறகே நடவடிக்கை.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக இன்று சந்தீப் நந்தூரி பதவியேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடியில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பிறகு கலெக்டர் வெங்கடேஷ் மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த சந்தீப் நந்தூரி கொண்டு வரப்பட்டுள்ளார். இன்று சந்தீப் நந்தூரி பதவியேற்றார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதற்கு சந்தீப் நந்தூரி பதிலளிக்கையில், இன்றுதான் பணியில் சேர்ந்துள்ளேன். பிறகு விரிவாக பேசுகிறேன். சூழ்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கமிஷன் விசாரணையை தொடங்கவுள்ளது. கமிஷன் விசாரணை முடிந்த பிறகே நடவடிக்கை குறித்து முடிவெடுக்க இயலும் என்றார் சந்தீப் நந்தூரி.












Click it and Unblock the Notifications