ரெய்டை விடுங்க.. சசிகலாவுக்கு சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கு தெரியுமா?
சசிகலாவின் ராசிக்கு இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ளலாம்.
Recommended Video

சென்னை: சசிகலாவிற்கு மீனம் ராசி, ரேவதி நட்சத்திரம். விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சி அடையும் சனிபகவானால் சசிகலாவிற்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.
ஜெயலலிதாவின் பின்னாடியே இருந்தவர் சசிகலா. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கட்சியில் முக்கிய பொறுப்புக்கு வந்தார். முதல்வராக நினைத்தால் அது முடியவில்லை. மாறாக சிறை சென்றார்.
விதி விடாமல் விரட்டுகிறது என்பது போல ரெய்டு சம்பவங்கள் சசிகலாவின் தூக்கத்தை தொலைத்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த குரு பெயர்ச்சியும் சசிகலாவிற்கு சரியில்லை. 8ல் குரு நின்று கொண்டிருக்கிறார். அதேபோல வரக்கூடிய சனிப்பெயர்ச்சி சசிகலாவிற்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

சசிகலாவின் ராசி மீனம்
சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம் சசிகலா.
சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம்.
கோசாரத்தில் 10ல் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் ஏழரைச் சனி காலங்களில் தொழில் சம்பந்தமான பிரச்னையால் தொழில் நஷ்டம், தொழில் மாற்றம், இடமாற்றம் கண்டிப்பாக ஏற்படும் என்பது நியதி. சசிகலாவிற்கு இம்முறை ராசிக்கு 10ல் சனி வந்து அமர்ந்துள்ளார்.

ஜெயலலிதா உடன் பிரிவு
சசிகலாவிற்கு 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீன ராசிக்கு அஷ்டமத்துச் சனி நடைபெற்ற போது அவமானத்தை சந்தித்தார் சசிகலா. ஜெயலலிதாவை விட்டு பிரிந்தார். அஷ்டமச் சனியில் சில ஏமாற்றங்கள், இழப்புகள் இருக்க வேண்டும். அது சசிகலாவிற்கு சரியாகவே இருந்தது.

தனுசு ராசியில் சனி சஞ்சாரம்
மீனம் ராசிக்கு 9வது இடத்தில் இருந்து சனிபகவான் 10வது இடத்திற்கு வருகிறார். இது கரும ஸ்தானம். வேலையில் நெருக்கடி நிலை ஏற்படும். தொழிலில் நெருக்கடிகள் ஏற்படும்.
வீட்டில் உள்ள மூத்தோரின் உடல் நலத்தில் கவனம் தேவையாக இருக்கும்.

தூக்கம் கெடும்
10வது இடத்தில் இருக்கும் சனிபகவான், ராசிக்கு 12வது இடத்தையும், ராசிக்கு 4வது இடத்தையும், ராசிக்கு 7வது இடத்தையும் பார்க்கிறார். எனவே பொறுமை அவசியம். பொறுத்தார் பூமியாள்வார் என்பது பழமொழி. ராசிக்கு 12வது இடத்தை சனிபகவான் பார்ப்பதால் பொருள் விரயம் ஏற்படும். தூக்கம் கெடும்.

வெட்டி விடுங்க
சனி உங்களின் லாப ஸ்தானாதிபதியாகவும், விரைய ஸ்தானாதிபதியாகவும் இருக்கிறார்.
ராசிக்கு 7வது இடத்தை 10வது பார்வையாக பார்க்கிறார். உடலில் அசதி ஏற்படும். கெட்ட நண்பர்களின் சகவாசத்தை வெட்டி விடுங்க. அப்பத்தான் தண்டனையில் இருந்து நீங்க தப்புவீங்க.

நேர்மை அவசியம்
கணவன் மனைவி உறவில் சிக்கல் ஏற்படும். மவுனம் சிறந்த மருந்து. அதை கடைபிடிங்க
மலைபோல் வரும் துன்பங்கள் பனிபோல விலக காக்கைக்கு எள் சாதம் வைக்க வேண்டும்.
நேர்மையாக இருந்தால் எந்த துன்பமும் உங்களை அண்டாது.

ஜாதக அம்சம்
நீதிமான் சனிபகவான் நேர்மையாக நடப்பவர்களை எந்த தீங்கும் செய்ய மாட்டார். இது பொதுவான பலன்தான். ஜாதகப்படி, தசாபுத்தியின் படி, அவரவர்களின் நல்ல எண்ணங்களின் படி சனிபகவான் நன்மை,தீமைகளை அளித்திடுவார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications